அல்லு அர்ஜுன் படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணு...அப்போ டைரக்டர் யாரு ?

சென்னை : கோலிவுட்டில் பல வெற்றி படங்களை தயாரித்து வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த தாணு, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை தயாரிக்க போகிறாராம்.

இந்த தகவலை தாணுவே உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கப்படும் என்ற தகவலை கூறவில்லை. அதே சமயம் கோலிவுட் டைரக்டர் ஒருவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முருகதாஸ் தான் டைரக்டரா

முருகதாஸ் தான் டைரக்டரா

இதனால் அல்லு அர்ஜுன் - கலைப்புலி தாணு இணையும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 2016 லேயே ஏ.ஆர்.முருகதாஸ், அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்க திட்டமிட்டார். இதனால் இந்த புதிய படத்தை முருகதாஸ் இயக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்பே தகவலை வெளியிட்ட ஹீரோ

முன்பே தகவலை வெளியிட்ட ஹீரோ

ஆனால் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா, ஐகான், புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் அளித்த பேட்டியில், புஷ்பா 2 படத்திற்கு பிறகு முருகதாஸ் அல்லது பாயப்படி ஸ்ரீனு படத்தில் தான் நடிக்க உள்ளதாக கூறி இருந்தார்.

தெலுங்கு ஹீரோக்களை இயக்கிய முருகதாஸ்

தெலுங்கு ஹீரோக்களை இயக்கிய முருகதாஸ்

முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கு ஹீரோக்களான மகேஷ் பாபு, சிரஞ்சீவி போன்ற தெலுங்கு ஹீரோக்களை இயக்கி உள்ளார். விஜய் நடித்த சர்க்கார் போன்ற ஹிட் படங்களையும் இயக்கி உள்ளார்.

 2 பான் இந்தியன் படங்களில் அல்லு அர்ஜுன்

2 பான் இந்தியன் படங்களில் அல்லு அர்ஜுன்

அப்படி இருந்தாலும் புஷ்பா 2 படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் 2 பான் இந்தியன் படங்களில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் அடுத்து எந்த மாதிரியான கதையில் அல்லு அர்ஜுன் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X