February updates: பிப்ரவரி மாதத்தில் ரசிகர்களை கவர காத்திருக்கும் அப்டேட்கள்.. அட இதுகூட இருக்கா!

சென்னை: 2024 இப்பொழுதுதான் துவங்கியதை போல உள்ளது. ஆனால் அதற்குள்ளாக ஒரு மாதத்தை கடந்துள்ளோம். இந்த ஆண்டு சினிமா ரசிகர்களுக்கு சிறப்பான ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய படங்கள் வெளியாகி அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. மூன்று படங்களுமே வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தன.

இந்தப் பட்டியலில் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் ரசிகர்களை சிறப்பாகவே கவர்ந்தது. தமிழ் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து கடந்த மாதத்தில் தூக்குதுரை, சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், கும்பாரி போன்ற படங்களும் வெளியாகி இந்த ஆண்டை சிறப்பாக துவக்கி வைத்துள்ளன. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திலும் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள லால் சலாம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகவுள்ளன. மேலும் சிறப்பான பல அறிவுப்புகளும் இந்த மாதத்தில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க காத்திருக்கின்றன.

Kollywood’s 2024 February month updates makes fans eagerly waiting

ரசிகர்களை கவர்ந்த படங்கள்: 2024ம் ஆண்டு துவங்கி ஜனவரி மாதம் கடந்துள்ளது. கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகை, குடியரசு தினக் கொண்டாட்டங்கள் இருந்த நிலையில், சினிமா ரசிகர்களுக்கு இந்த நாட்களையொட்டி வெளியான படங்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளன. கடந்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்த 4 படங்களும் வித்தியாசமான ஜானர்களில் வெளியான நிலையில், சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளன.

பிப்ரவரி ரிலீஸ் படங்கள்: மேலும் கடந்த மாதத்தில் தூக்குதுரை, சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், கும்பாரி போன்ற படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. கடந்த மாதத்தை போலவே தற்போது பிப்ரவரி மாதத்திலும் முன்னணி படங்கள் வெளியாகவுள்ளன. இதில் முதன்மையாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 9ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் காத்திருப்பு: இந்தப் படத்தை தொடர்ந்து சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி, டெவில், சிக்லெட்ஸ், மறக்குமா நெஞ்சம் ஆகிய படங்கள் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளன. அடுத்த வாரம் 9ம் தேதி லால் சலாம், லவ்வர் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. வரும் 16ம் தேதி ஜெயம்ரவியின் சைரன், தி பாய்ஸ், வித்தைக்காரன் ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளன. தொடர்ந்து 23ம் தேதி பைரி காசிமேடு கேட், நினைவெல்லாம் நீயடா போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளன. இந்த மாதத்தில் வெளியாகவுள்ள இந்தப் படங்களில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வசூல்வேட்டை நடத்தும் படங்கள் குறித்து பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்தடுத்த அப்டேட்கள்: இதனிடையே இந்த மாதத்தில் கோலிவுட்டில் அதிகமான எதிர்பார்ப்பை உண்டு செய்துள்ள படங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளன. இன்றைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி STR48 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளன. இதனிடையே வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அவரது எஸ்கே21 படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாதத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பும் ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X