தீபாவளி அப்டேட்: களத்தில் நிற்கும் நான்கு படங்கள்!
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் மட்டும் உள்ளது. இந்த நிலையில் தமிழில் நான்கு படங்கள் ரிஸீசுக்கு தயாராகிக் கொண்டுள்ளன.
இந்த நான்கில் மூன்று படங்கள் முற்றிலும் தயாராகி, சென்சாருக்குக் காத்திருக்கின்றன.

நான்கு படங்கள்
கோலிவுட்டின் பெரிய பாக்ஸ் ஆபீஸ் சீசன்களில் ஒன்றான தீபாவளிக்கு நான்கு படங்கள் ரிலீசாகும் நிலை உள்ளது. அஜீத், விஷால், ஆர்யா, கார்த்தி நடித்த படங்கள் இந்த நாளில் மோதுகின்றன.

ஆரம்பம்
அஜீத் நடித்த ஆரம்பம்தான் இந்த தீபாவளிக்கு முதன் முதலில் தயாரான படமாகும். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இந்தப படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நயன்தாரா, ஆர்யா, டாப்சியும் நடித்துள்ளனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா
'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். சந்தானம், ராதிகா ஆப்தே போன்றோரும் உள்ளனர். ராஜேஷ் இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். குடும்ப சென்டிமென்டுடன் கூடிய காமெடி படமாக தயாராகியுள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகேவுக்குப் பிறகு ராஜேஷ் இயக்கியுள்ள படம் இது.

பாண்டிய நாடு
விஷால்-லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள படம் பாண்டிய நாடு. சுசீந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை விஷாலே சொந்தமாக தயாரித்து உள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. படத்துக்கு 300 தியேட்டர்கள் வரை இப்போதே ஒதுக்கப்பட்டுவிட்டது.

இரண்டாம் உலகம்
உண்மையில் இந்த தீபாவளிக்கு தயார் நிலையைில் உள்ளதாக அறிவிக்க்பட்ட படம் இரண்டாம் உலகம்தான். ஆனால் பின்னணி இசை சேர்ப்பதில் பிரச்சினையாகிவிட்டது. இப்போது புடாபெஸ்டில் உள்ள செல்வராகவன் - அனிருத் கோடம்பாக்கம் திரும்பியதும் பட ரிலீஸ் உறுதயாகிவிடும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











