மும்பை மீது மையல் கொண்ட அஜீத், விஜய், சூர்யா மற்றும் பலர்!

By Siva

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்கள் அண்மை காலமாக மும்பையில் எடுக்கப்பட்டு வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களின் படப்பிடிப்புகள் தற்போது அதிக அளவில் மும்பையில் நடைபெறுகிறது. அவ்வாறு மும்பையில் எடுத்தால் படம் வெற்றி பெறும் என்று நினைக்கிறார்களோ. அவர்களின் நினைப்பும் ஒரு வகையில் சரி என்று தான் கூற வேண்டும்.

அவ்வாறு மும்பையில் எடுக்கப்பட்ட, எடுக்கப்படும் படங்களை பார்ப்போம்.

துப்பாக்கி

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படம் மும்பையில் எடுக்கப்பட்டது. படத்தில் விஜய் ஒரு சில இந்தி வார்த்தைகள் கூட பேசியிருப்பார்.

தலைவா

தலைவா

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் மும்பையில் படமாக்கப்பட்டது(வெளிநாட்டிலும் தான்). படத்தில் விஜய் மும்பை தமிழர்களை காக்கும் ரட்சகனாக அவதாரம் எடுப்பார்.

மங்காத்தா

மங்காத்தா

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த மங்காத்தா படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் தான் எடுக்கப்பட்டன. அஜீத் மகாராஷ்டிர மாநில போலீஸ்காரராக நடித்திருந்தார்.

ஆரம்பம்

ஆரம்பம்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் பெரும்பாலான பகுதிகளும் மும்பையில் தான் எடுக்கப்பட்டன.

சூர்யா

சூர்யா

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பெரும்பாலான பகுதிகள் மும்பையில் படமாக்கப்பட உள்ளனவாம். இந்த படத்தில் சூர்யா 2 கெட்டப்புகளில் வருகிறார். அதில் ஒரு கெட்டப்பில் தாடியுடன் வருகிறார். பாட்ஷா படத்தில் ரஜினி தமிழகத்தில் தாடியில்லாமல் ஆட்டோ ஓட்டியதும், மும்பையில் தாடியுடன் நடித்ததும் ஞாபகம் வருகிறதே சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X