»   »  சிவகார்த்திகேயன் விவகாரம்... தற்கொலை செய்யப் போவதாக பிரபல தயாரிப்பாளர் கதறல்! - Exclusive

சிவகார்த்திகேயன் விவகாரம்... தற்கொலை செய்யப் போவதாக பிரபல தயாரிப்பாளர் கதறல்! - Exclusive

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் கால்ஷீட் விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மெகா ஹிட்டடித்த பிறகு சிவகார்த்திகேயனிடம் பல முன்னணி நிறுவனங்கள் கால்ஷீட் கேட்டு நின்றன. மூன்றுபேருக்கு அவர் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர்களில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் ஒருவர்.

Kollywood shocked over Top producer's suicide note

ஆரம்பத்தில் கால்ஷீட் தருவதாக ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன், தனது அடுத்தடுத்த படங்களின் வசூல் மற்றும் சம்பளம் போன்றவற்றை மனதில் வைத்து நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நெருக்கடி முற்ற, ரெமோ படத்தின் வெற்றி விழாவில் 'நிம்மதியா தொழில் செய்ய விடுங்க' கண்ணீர்விட்டார்.

தொடர்ந்து மூன்று தயாரிப்பாளர்களின் பிரச்சினை துரத்த, 'இப்போதுள்ள மார்க்கெட் நிலவரப்படி சம்பளம் தந்தால் மட்டுமே நடிப்பேன்' என்றார்.

Kollywood shocked over Top producer's suicide note

ஆனால் மூன்று தயாரிப்பாளர்களுமே தங்களுக்கு சிவகார்த்திகேயன் முன்பு கொடுத்த வாக்குறுதியை மதித்து படங்கள் பண்ணித் தரவேண்டும். பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக நிற்கின்றனர்.

இந்த நிலையில், தனது புதிய படத்தை நேற்று தொடங்கிவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஒப்பந்தத்தை மீறி சிவகார்த்திகேயன் செயல்பட்டதால், மனமுடைந்த பிரபல தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, அடுத்து தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வழியில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வாட்ஸ்ஆப் குழு ஒன்றுக்கு அனுப்பியுள்ள செய்தியில், "நியாயம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத்தைத்தான் நம்பியுள்ளேன். நியாயம் கிடைக்கும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். கிடைக்காது என்கிற பொழுது தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சிவகார்த்திகேயன் விஷயத்தில் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. என் வாழ்க்கையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Top producer Studio Green Gnanavel Raja has sent a suicide note through whatsapp due to Sivakarthikeyan's refusal to give call sheet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil