'ரெட்ரோ' வெற்றி பெற பிரார்த்தனை.. கவுஹாத்தி காமாக்யா கோவிலில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்!
சென்னை: நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் அஸ்ஸா மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு பெரும் பொருட் செலவில் கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கார்த்திக், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்திருந்தனர். ஞானவேல் ராஜா தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய, ஞானவேல் ராஜா, இந்த படத்திற்காக சூர்யா கடுமையாக உழைத்து இருக்கிறார். படம் நிச்சயம் 2000 ஆயிரம் கோடி வசூல் செய்யும், பான் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் படமாக கங்குவா இருக்கும் என்றார்.

கங்குவா தோல்வி: ஆனால், கங்குவா படம் வெளியான முதல் நாளிலேயே கடுமையாக விமர்சத்திற்கு உள்ளானது. கதையே இல்லை, ஒரே சத்தம் என அடுத்தடுத்து வந்த விமர்சனத்தால், படம் வெளியான சில வாரத்திலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 200 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வி திரைப்படமானது. இதுகுறித்து, கருத்து தெரிவித்து இருந்த நடிகை ஜோதிகா, படத்தின் முதல் 20 நிமிடங்கள் மட்டுமே சரியாக இல்லை, மற்றபடி படத்தை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பது ஏன் என்று தெரியவில்லை. படத்திற்காகப் பலரும் கடுமையாக உழைத்திருக்கின்றனர். படமும் தனித்துவமாக இருக்கிறது. கங்குவா படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை ஊடகங்கள் நியாயமாக செயல்படவில்லை என கூறியிருந்தார்.
சண்டி யாகம்: இதைத்தொடர்ந்து, நடிகை ஜோதிகா தனது கணவரை அழைத்துக்கொண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், அந்த கோவில் சண்டி யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. சண்டி யாகம் என்பது வாழ்க்கையில் தடைகள் விலகவும், எதிரிகளை வீழ்த்தவும் இந்த யாகம் நடத்தப்படும் என்பது ஐதீகமாக உள்ளது.

காமாக்யா கோயில் : இந்நிலையில், சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியாக அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த போட்டோக்களை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் பழமையான இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் ஒன்றாகும், இந்த கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வந்து வணங்குவது வழக்கம். அப்படி சக்தி வாய்ந்த காமாக்யா கோவிலில் தான் கணவன் மனைவி இருவரும் மனம் உருகி பிரார்த்தனை செய்துள்ளனர்.

ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ரெட்ரோ' படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் மே 1ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படம் வெற்றி பெற வேண்டுமென சூர்யா , ஜோதிகா இருவரும் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











