ஆர்யா-நயன், சித்து-சமந்தா: இவர்களுக்குள் காதல் இருக்கு, ஆனால் இல்லை

By Siva

சென்னை: ஆர்யா-நயன்தாரா, சித்தார்த்-சமந்தா, த்ரிஷா-ராணா ஆகியோர் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

காதல் என்று வந்தால் திரை உலக பிரபலங்கள் அவ்வளவு எளிதில் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். எங்கு பார்த்தாலும் ஜோடியாகவே வருகிறீர்களே காதலா என்று கேட்டால் சீச்சீ நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பார்கள். இந்த நல்ல நண்பர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது காதல் தான் என்பது ரசிகர்களுக்கே தெரிந்துவிட்டது.

அப்படி காதல் என்று கூறப்பட்டாலும் நாங்கள் எல்லாம் நண்பர்கள் என்று கூறும் சில பிரபலங்களை பார்ப்போம்,

ஆர்யா, நயன்தாரா

ஆர்யா, நயன்தாரா

நயன்தாரா எப்போது மீண்டும் நடிக்க வந்தாரோ அதில் இருந்து அவருக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. காதலை அவர்கள் மறுத்தாலும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக காணப்படுகின்றனர்.

சித்தார்த்-சமந்தா

சித்தார்த்-சமந்தா

சித்தார்த், சமந்தா காதலிப்பது ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரியும். ஆனால் அது குறித்து கேட்டால் மட்டும் நைசாக நழுவிவிடுவார்கள்.

ராணா, த்ரிஷா

ராணா, த்ரிஷா

ராணா, த்ரிஷா அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். இவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை ரகம்.

விஷால், வரலட்சுமி

விஷால், வரலட்சுமி

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் இதை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துவிட்டனர்.

ஒரு உதாரணம்

ஒரு உதாரணம்

நம்ம ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலிக்கையில் நாங்கள் எல்லாம் நண்பர்கள் டயலாக்கை தான் அடிக்கடி கூறினார். இறுதியில் ரித்தேஷை திருமணம் செய்து தற்போது கர்ப்பமாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X