டிரிம் செய்த தாடி.. வசீகரித்து இழுக்கும் ஹீரோக்கள்.. இதுதான் டிரெண்டும்மா!

சென்னை : ஹீரோக்கள் மாறலாம்.. ஆனால் அவர்களுக்கான இலக்கணம் மட்டும் மாறவே மாறாது. வாட்டசாட்டமான உடல், பளபளக்கும் சருமம், டிரிம் செய்யப்பட்ட தாடி, ஹேண்ட்சம் லுக் என்ற முத்திரை தான் இப்போதைய கதாநாயகர்களின் டிரெண்ட் மார்க்.

சில படங்களில் தாடியுடன் நாயகன் வலம் வந்து விட்டால் அது காதல் தோல்வி படமாக இருக்கும், இல்லை சோகம் நிறைந்த படமாக இருக்கும். இது அந்தக் காலம்.

அந்த நிலை எல்லாம் மாறி, ட்ரிம் செய்த தாடி, லைட்டா முறுக்கிவிட்ட மீசைதான் இன்றைய நாயகர்களின் நியூ லுக். அப்படி படத்தில் தாடி மீசையுடன் வலம் வந்த நடிகர்களை பற்றி இப்போது பார்ப்போம்.

 அட்டகாசமான தாடி

அட்டகாசமான தாடி

சீயான் விக்ரம் என்ற அடைமொழியைப் பெற்றுத்தந்த படம் தான் சேது. இந்த படத்தில், விக்ரம் தாடியுடன் நடித்து அசத்தி இருப்பார். விக்ரமின் திரை வாழ்க்கையை திருப்பிப் போட்ட இந்த படத்தில் ஒரு கல்லூரி மாணவனாக வந்து அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொண்டு இருப்பார் விக்ரம். ராவணன், கடாரம்கொண்டான் போன்ற படங்களிலும் ஸ்மார்ட்டாக வந்து அசத்தி இருப்பார்.

 தனி கெத்து

தனி கெத்து

தனுஷ் தாடியுடன் மாஸாக நடித்த படம் புதுப்பேட்டை இந்த படம் தான் அவரது வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. பெண்களின் மனம் கவர்ந்த நடிகனாக காலேஜ் க்யூன்களின் விருப்பத்திற்கு ஏற்ப ட்ரீம் பாயாக வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி போன்ற படங்களில் தாடியுடன் வந்து தனி கெத்துக்காட்டி இருப்பார்.

 சாக்லெட் பாய்

சாக்லெட் பாய்

தாடிக்கும் சிம்புக்கும் நிறைய தொடர்பு உண்டு, சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் எப்போதும் தேவதாஸ் போல தாடியுடனே வலம் வந்து சோக கீதம் பாடுவார். "சிம்புக்கு டிஆர் தான் டாடி.. ஆனால் டிஆருக்கு தாடிதான் ஐடி".. என்று பாட்டே பாடலாம். அவரது மகன் சிம்பு தாடியுடன் வந்து சாக்லெட் பாயாக ஜொலித்து வந்தார். அவர் முதன் முதலில் தொட்டி ஜெயா படத்தில் தாடியுடன் தோன்றினார். இந்த படம் ஹிட்டடிக்க அவரது கதாபாத்திரமும் அதற்கு ஏற்றால் போல் இருந்த தாடியும் தான்.

 கனவு கண்ணாக மாற்றியது

கனவு கண்ணாக மாற்றியது

மௌனம் பேசியதே படத்தில் லைட்டா வைத்த தாடி, கச்சிதமான சிரிப்பு என இருந்த சூர்யாவுக்கு அந்த கெட்ட மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. பெண்களின் கனவு கண்ணாக சூர்யா மாற, இந்த படமும் ஒரு காரணம். இதைத்தொடர்ந்து சிங்கம்2, அஞ்சான் போன்ற படங்களில் தொடர்ந்து தனது கெட்டப்பை மாற்றாமல் லைட்டான தாடியுடன் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

 வெள்ளை தாடி

வெள்ளை தாடி

சமீபத்தில் விஜய் சேதுபதி வெள்ளை தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. புது படத்தின் கெட்டப்பாக இருக்கும் என நினைத்த போது. லாக்டவுன்ல டை அடிக்க வேண்டாம்னு விட்டுட்டேனு அசல்டா சொன்னாரு. விஜய் சேதுபதி பெரும்பாலான படங்களில் க்ளீன் சேவ் பண்ணி சும்மா டிப் டாப்பாத்தான் இருப்பாரு. இருந்தாலும் இந்த வெள்ளைத்தாடி இவருக்கு அழகுதான். தாடி வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறது என்பதால் பெரும்பாலான நாடிகர்கள் தாடியுடன் வலம் வருகின்றனர். இப்போது டிரெண்டிங்கான மாஸான ஸ்டைலாக மாறி வருகிறது இந்த தாடி லுக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X