சிவகார்த்திகேயனை வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்.. அடுத்த டார்கெட் அஜித்தா? சும்மா இருக்க மாட்டாங்களே?

சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பெரிய பிரச்னை, இணையத்தில் நடக்கும் வாக்குவாதங்கள். இது அவ்வப்போது ரசிகர்களுக்கு இடையேயான மோதலை அதுவும் அடி தடியாகவும் மாறிய சம்பவங்களும் உள்ளது. இதில் அடிக்கடி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ரசிகர்கள் என்றால் அது விஜயின் ரசிகர்கள் தான். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தை உதாரணமாக கூறலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. பொங்கலுக்கு ஜன நாயகன் படமும் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. ஆனால் பொங்கலுக்கு விஜய் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் வெளியாகிறது என்ற காரணத்திற்காகவே விஜய் ரசிகர்கள், சிவகார்த்திகேயன் தொடங்கி அவரது குடும்பத்தினர், படக்குழுவினர் என பலரையும் மோசமாக விமர்சித்தனர். இதற்காக சிவகார்த்திகேயனின் தயார் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகார்த்திகேயனே தெரிவித்தார். மேலும் மோசமான விமர்சனங்களை முன் வைத்த பல சமூக வலைதள பதிவுகளும் இப்போதும் உள்ளது.

Kollywood Talks About Mankatha And Theri Re Release On January 23rd it May Creates Vijay and Ajith Fans Fight
Photo Credit:

அஜித் - விஜய்: இப்படி இருக்கையில், தற்போதுவரை தமிழில் ரீ ரிலீஸில் அதிக வசூல் குவித்த படம் என்றால் அது விஜய்யின் கில்லி படம் தான். இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 10 கோடிகள் வரை வசூல் செய்தது. இதனால் மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகி இந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தற்போது மங்காத்தா படம் வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கையில் விஜயின் தெறி படமும் வரும் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கையில் இதன் மூலம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையில் இணையதளத்தில் வாக்குவாதம் ஏற்படலாம் என்ற பேச்சுக்கள் இப்போதே தொடங்கிவிட்டது.

சண்டை: தெறி படத்தை 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்ததும், திரைத்துறையில் இது தொடர்பான பேச்சு பரபரப்பாக ஓடிக் கொண்டு உள்ளது. ஏற்கனவே திமுக மீதுள்ள கோபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பராசக்தி படக்குழுவினரை மோசமாக விமர்சித்தனர். தற்போது அஜித்தா விஜய்யா என்ற சூழல் உருவாகி உள்ளதால், விஜய் ரசிகர்கள் அமைதியாக இருப்பார்களா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X