'தல 56' படத்தை தயாரிக்க தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி
சென்னை: வீரம் சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்க உள்ள படத்தை தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா நடித்த வீரம் படம் ஹிட்டானது. இதையடுத்து அஜீத்தை வைத்து மீண்டும் படம் பண்ண விரும்பினார் சிவா. அதற்கு அஜீத்தும் பச்சைக் கொடி காட்டினார். இதையடுத்து சிவா பேப்பர், பேனாவை எடுத்து கதை, திரைக்கதை எழுதும் வேலையில் இறங்கிவிட்டார்.
சிவா திரைக்கதையை தயார் செய்யும் நேரத்தில் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப குழு
சிவா 'தல 56' படத்திற்கான தொழில்நுட்ப குழுவை தேர்வு செய்துவிட்டார். ஆனால் இன்னும் தயாரிப்பாளர் தான் தேர்வு செய்யப்படவில்லை.

போட்டி
சிவா, அஜீத் இணையும் படத்தை தயாரிக்க தமிழ் தவிர தெலுங்கு பட தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். இதில் யாரையாவது தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளார் சிவா.

தெலுங்கு ஏன்?
சிவா எடுக்கப் போவதோ தமிழ் படம். இதை தயாரிக்க தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் ஏன் ரெடியாக உள்ளனர் என்று நினைக்கிறீர்களா?

ஆந்திராவில்
சிவா ஆந்திராவில் உள்ள வெற்றி இயக்குனர்களில் ஒருவர். அவர் அங்கு இயக்கிய 4 படங்களில் 2 ஹிட், 1 சூப்பர் ஹிட், 1 ஓடியது. மேலும் அஜீத்துக்கு ஆந்திராவிலும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் டோலிவுட் தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு ஆர்வம்.

அதிரடி
அதிரடிக்கு பெயர் போன சிவா அஜீத்தை வைத்து அடுத்த ஹிட் கொடுக்க தயாராகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











