மிஸ்கின் பிறந்தநாள்... இயக்குனர்கள் ஒன்றாக கூடி வாழ்த்து... வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை : இயக்குனர் மிஸ்கின் நேற்று செப்டம்பர் 20ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி வந்ததையொட்டி திரையுலகைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்கள் பலரும் இணைந்து பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

மிஸ்கின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படமான பிசாசு 2 திரைப்படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்த நிலையில் அதே கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

திரைப்படங்களில் வரும் வழக்கமான
மசாலாக்களை அறவே தவிர்த்து விட்டு தனக்கென ஒரு பாணியை இன்று வரும் கையாண்டு வரும் மிஸ்கின் தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்து வரும் நிலையில் இவரின் பிறந்தநாள் அன்று பல முன்னணி இயக்குனர்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடியது பலரையும் நெகிழ செய்து இப்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கதையையும் எழுத்துக்களையும்

கதையையும் எழுத்துக்களையும்

சினிமாவை பொறுத்தவரை பல இயக்குனர்கள் ஹீரோக்களின் மார்க்கெட்டை பொருத்து தங்களின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வரும் நிலையில் கதையையும் தன்னுடைய எழுத்துக்களையும் மட்டுமே நம்பி இன்றுவரை திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார்.

மேக்கிங் ஸ்டைல்

மேக்கிங் ஸ்டைல்

யூத், காதல் வைரஸ், ஜித்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிஸ்கின் "சித்திரம் பேசுதடி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது காலடி பதித்தார். மிக இயல்பான சண்டைக்காட்சிகள் எதார்த்தமான நடிப்பு ஹீரோயிஸம் காட்டாத ஹீரோக்கள் என தனது வித்தியாசமான மேக்கிங் ஸ்டைல் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார்.

மிகையில்லாத நடிப்பு

மிகையில்லாத நடிப்பு

மசாலா படங்களை இயக்குவதை முற்றிலும் தவிர்த்து வரும் மிஸ்கின், பெரும்பாலான டார்க் காட்சிகள், நடிகர்களின் கால்கள், மிகையில்லாத எதார்த்தமான நடிப்பு என தனது திரைப்படங்களை ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்ததோடு விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறார்.

மாஸான அப்டேட்

மாஸான அப்டேட்

அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ என பல தரமான திரைப்படங்களை இயக்கி வரும் மிஸ்கினுக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வரும் நிலையில் தனது அடுத்த படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

இயக்குனர்கள் ஒன்றுகூடி

இயக்குனர்கள் ஒன்றுகூடி

பிசாசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு பாகம்-2 தான் இயக்க உள்ளதாக மிஸ்கின் அறிவித்திருந்த நிலையில் செப்டம்பர் 20ம் தேதியான நேற்று மிஸ்கின் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை ஒட்டி திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர்கள் மணிரத்னம், கௌதம் மேனன், ஷங்கர், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சசி ஆகியோர் இவரின் பிறந்த நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடிய கையோடு இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பெரும் மகிழ்ச்சியில் சமூக வலைத்தளங்களில் இதை பகிர்ந்து வருவதோடு இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X