வீல் சேரில் பொன்னம்பலம்.. அப்படி இருந்தவர் இப்படி ஆக இதுதான் காரணமாம்.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் ஃபேமஸானவர் பொன்னம்பலம். ரஜினி, கமல், விஜய், அஜித் என பலரது படங்களில் நடித்திருக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதேசமயம் உடல்நல குறைவாலும் பாதிப்படைந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு துக்க நிகழ்வுக்கு வீல் சேரில் அவர் வந்ததை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பொன்னம்பலம் பற்றி பேசியிருக்கிறார்.

பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கமுடியாதவர். ஆஜானுபாகுவான உடலோடு அவர் திரையில் சண்டை போட வந்தாலே பிரமிப்படைவார்கள் ரசிகர்கள். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் வில்லனாக நடித்துவிட்டார். தன்னுடைய பெரிய உடலை மட்டும் வைத்து கரியரை நகர்த்தாமல் தனது நடிப்பிலும் வித்தியாசமான மேனரிஸத்தை காண்பிக்கக்கூடியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய் கிழவி: இப்போது தாய் கிழவி என்ற வார்த்தை படு ஃபேமஸ். தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில்கூட அந்த வார்த்தையை வைத்து ஒரு பாடலே போட்டுவிட்டார்கள். ஆனால் இந்த வார்த்தையை முதன்முறையாக பிரபலம் ஆக்கியவர் பொன்னம்பலம்தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான நாட்டாமை படத்தில் மனோரமாவை பார்த்து அப்படி சொன்னார். அந்த வார்த்தையை வித்தியாசமான மாடுலேஷனில் சொல்லி அதை நிலைக்க செய்துவிட்டார்.

Kollywood Villain Ponnambalam s Struggles Revealed by Producer Balaji Prabu
Photo Credit:

கிட்னி பிரச்னை: தொடர்ந்து பீக்கில் சென்றுகொண்டிருந்த அவரது கரியர் கொஞ்சம் தடுமாறியது. அந்த சூழலில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால் அது ஒன்றும் அவரது கரியர் மீண்டும் உயரம் செல்ல பெரிதாக உதவவில்லை. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தன. இதற்கிடையே அவருக்கு கிட்னி பிரச்னையும் வர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உதவிய நடிகர்கள்: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நல்லபடியாக மீண்டு வந்தார். அதேசமயம் அவர் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது நடிகர்களில் பெரும்பாலானவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தனுஷ் உள்ளிட்டோர் பெரிய உதவிகளை செய்ததாக பின் நாட்களில் அவரே தெரிவித்திருந்தார். சிகிச்சை பெற்று நல்லபடியாக இருந்த அவர்; சமீபத்தில் ஒரு துக்க நிகழ்வுக்கு வீல் சேரில் வந்திருந்தார். அது பார்ப்போரை கலங்க செய்தது.

பாலாஜி பிரபு பேட்டி: எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என்று ரசிகர்கள் உச் கொட்டினார்கள். சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சினிமவில் ஒருவர் டாப்பில் இருக்கலாம். ஆனால் ஒருவேளை சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் பொன்னம்பலம் நடித்திருக்கிறார். ஆனால் அவர் போன்ற நடிகர்களுக்கு சாபம் என்னவென்றால் சம்பளம் அதிகமாக கொடுக்கமாட்டார்கள்.

வேலைகள் இருக்காது: வருடத்தின் 365 நாட்களில் இவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுக்கு அதிகபட்சம் முப்பது நாட்கள்தான் வேலை இருக்கும். சமீபத்தில் வீல் சேரில் வந்தார். வீல் சேரில் அமர்ந்துகொண்டே டான்ஸ்லாம் ஆடினார். ஆனால் அதையும் முழுவதுமாக அவரால் செய்ய முடியவில்லை. உண்மையிலேயே அதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பேர், புகழ் எல்லாம் சம்பாதித்தார். ஆனால் அப்படி இருந்தவர் இப்படி ஆனதற்கு கிட்னி செயலிழப்புதான் காரணம். ஸ்டண்ட் நடிகர்களை பொறுத்தவரை உடலை கட்டு குலையாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக முட்டைகள் அதிகம் சாப்பிடுவார்கள். தினமும் மட்டன், சிக்கன், பீஃப் என எல்லாவற்றையும் உண்பார்கள். அதுவும் கிட்னி செயலிழப்புக்கு ஒரு காரணம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X