கொளுத்துங்கடா... நள்ளிரவில் வெளியானது மாஸ்டர் பட புதிய போஸ்டர்.. ரணகள கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

By

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, புதிய போஸ்டரை மாஸ்டர் படக்குழு நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

Recommended Video

THALAPATHY VIJAY என்ன TOM & JERRY னுதான் கூப்டுவாறு | GAYATHRI RAGHURAM | V-CONNECT |FILMIBEAT TAMIL

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, வில்லனாக நடிக்கிறார்.

மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறி வருகின்றனர்.

கொண்டாட வேண்டாம்

கொண்டாட வேண்டாம்

விஜய் ரசிகர்கள், அந்தப் படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு இன்று 46 வது பிறந்த நாள். அவரது பிறந்த தினத்தை ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம். கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில், தனது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரமாண்ட போஸ்டர்கள்

பிரமாண்ட போஸ்டர்கள்

அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம், பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

WaitingForMaster

WaitingForMaster

சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக #HBDTHALAPATHYVijay, #WaitingForMaster, #ThalaFansDay ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு சிறப்பு பிறந்த போஸ்டரை உருவாக்கி, ட்விட்டரில் நேற்று வெளியிட்டிருந்தார்.

மாஸ்டர் டிரைலர்

மாஸ்டர் டிரைலர்

ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டிரைலரை எதிர்பாக்கிறோம் என்று கூறிவருகின்றனர். இதற்காக மாஸ்டர் டிரைலர் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியும் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு நள்ளிரவு வெளியிட்டுள்ளது.

மஞ்சள் நிற பின்னணி

மஞ்சள் நிற பின்னணி

'கொளுத்துங்கடா' என்ற டேக் லைனுடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், கண்ணாடி அணிந்தபடி ஸ்டைலாக பார்க்கும் விஜய்யின் படம் பெரிதாக இருக்கிறது. அதன் கீழே, நடனக் கலைஞர்களுடன் விஜய் ஆக்ரோஷமாக ஆடுகிறார். மஞ்சள் நிற பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X