ஆகஸ்ட் 15 முதல் திரைக்கு வருகிறது ஜெயம் ரவியின் கோமாளி!
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி அதிரடி, காமெடி, ரொமான்டிக் என அனைத்து ஜோனர்களிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான கோமாளி படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.
கோமாளி படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா
ரிச்சர்ட் நேத்தன் கேமரா மேனாகப் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்டர்
இந்த படத்தில் ஜெயம் ரவி பல வித கெட்டப்புகளில் நடித்துள்ளார். கோமாளி படத்தின் போஸ்டர்களும் படத்தை காணும் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

பைசா நோட் பாடல்
கோமாளி படத்தில் இருந்து இதுவரை பைசா நோட் பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை கோமாளி படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை.

ரசிக்ர்கள் காத்திருப்பு
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











