twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லென்ஸ் வச்சு பார்த்தாலும் கொம்பன் படத்தில ஜாதியை காணோமே!

    By Mayura Akilan
    |

    கார்த்தி நடித்துள்ள கொம்பன் படம் வெளியாகும் முன்பாக ஜாதி பிரச்சினை வெடிக்கும் என்று கூறிவந்தவர்கள் படம் வெளியான பின்னர் மூச்சு பேச்சு கூட விடாமல் இருக்கின்றனர். ஆனால் படம் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கொம்பன் பற்றி கருத்துக்களை குவித்து வருகின்றனர்.

    முதல் நாள் முதல் காட்சி பார்த்த கையோடும், தியேட்டரில் இருந்தபடியும் கொம்பன் பற்றியும் பதிவிட்டு வருகின்றனர். எல்லாமே பாசிட்டிவ் கருத்துக்களாக இருப்பதால் கொம்பன் டீம் உற்சாகமடைந்துள்ளனர்.

    நடிகர் விவேக்

    கொம்பன் பார்த்தேன். ஒரு மாமனார் மருமகன் உறவை உணர்ச்சிபூர்வமாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த சாதியும் இழிவுபடுத்தப்படவில்லை.

    ஷாந்தனு பாக்யராஜ்

    தவறான நோக்கத்தோடு படத்தின் வெளியீட்டை சிலர் தடுத்தனர். கொம்பன் அடைந்திருக்கும் வெற்றி, தமிழ் சினிமா துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கிறேன்.

    பதற்றம் இல்லை

    ரிலீஸ் ஆகறதுக்கு முன்னதான்யா பதற்றமான சூழல் இருந்துச்சி. இப்ப ஒரு சத்தமும் இல்ல. எதற்காக இந்த படத்திற்கு தடை கேட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்றும் சிலர் ட்விட்டியுள்ளனர்.

    கிருஷ்ணசாமிக்கு இருக்கு

    கிருஷ்ணசாமிக்கு இருக்கு

    ப்ரோ கொம்பன் பாடல் & பின்னணி இசை சூப்பர். ஒரே வருத்தம் என்னனா? க்ளைமேக்ஸ்ல மங்காத்தா மியூசிக் போட்டுடீங்களே ப்ரோ.. என்று கூறியுள்ள அவரே கிருஷ்ணசாமியை குமுறப் போகிறார்கள் என்று ட்விட்டியுள்ளார்.

    அதைவிட கொம்பன் ஓரளவு வசூல் பண்ணினா, அதில கொஞ்சம் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு கொடுக்குறது தான் தொழில் தர்மம் என்றும் ஒருவர் ட்விட்டியுள்ளார்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    ஆக எல்லாருமா சேர்ந்து ஒரு புள்ளப்பூச்சியை அடிச்சிருக்கீங்க... அதுல உங்களுக்கு வெங்கலக் கிண்ணம் வேற வேணுமாக்கும்! உஸ்ஸ்ஸ்! இந்த கொம்பன் படத்துக்கான அரசியல் எங்கூர்ல ஆரம்பமாகுது போல... ஐநூறுக்கும் மேல போலீஸ் குவிப்பு... நல்லா வருவீங்கயா.

    விஜய் என்ட்ரி வேற

    விஜய் என்ட்ரி வேற

    என்னடா கொம்பன் படத்துக்கு இவ்ளோ எதிர்ப்பு வருதேன்னு பாத்தா ஓப்பனிங் சீன்ல ஜில்லா படம் + இளையதளபதி என்டராமே?? . ஜெயில்ல இருக்கிறவங்களுக்கு அதிகபட்ச தண்டனை ஜில்லா படம் போட்டதுதான் என்றும் சில குசும்பர்கள் ட்விட்டியுள்ளனர். கைதிகளே ஜெயிலில் இருக்கோம்னு சோகத்துல இருப்பானுங்க... அதுல அவைங்கள கூப்டு உக்கார வச்சு ஜில்லா படம் ஓட்டுறானுங்க... உஸ்ஸ் பாவம் பா என்றும் போட்டுள்ளனர்

    கொம்பன் தத்துவங்கள்

    கொம்பன் தத்துவங்கள்

    "முடியை வெட்டினா வலிக்காது. பிடுங்கினாதான்யா வலிக்கும். அப்படித்தான் ஒரு பொண்ணோட வாழ்க்கை!"

    "ஒரு பொண்ணுக்குப் பெத்தவன் நெத்தி மாதிரி. ஆனா கட்டினவன் பொட்டு மாதிரி"

    "என் பையன் இருக்கானே, அவன் கொல்லையில இருக்கிற சாணி மாதிரி. அவனை இந்த ஊர்க்காரங்க எருவா மாத்திட்டாங்க. நீதான் அந்த சாணியைப் பிடிச்சுப் பிள்ளையார் ஆக்கணும்" என்று கொம்பன் படத்தின் வசனங்களையும் சில வலைஞர்கள் பதிவிட்டுள்ளனர். ட்விட்டர் விமர்சனங்கள் பாசிட்டிவ் ஆக இருப்பதால் கொம்பன் டீம் உற்சாகமடைந்துள்ளனராம்.

    English summary
    Butcher Kombaya Pandian's character is loved by all as he is a good man. He does not tolerate injustice to people and has high respect for women.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X