காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கொம்பன் படக்குழு... வனத்துறையினர் மீட்டனர்

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுக்குள் நடந்த படப்பிடிப்பின் போது கொம்பன் படக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பின்னர், வனத்துறையினர் விரைந்து செயலாற்றி அவர்களை மீட்டனர்.

மெட்ராஸ் பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி கொம்பன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டிப்புலி இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கோவை சரளா, ராஜ்கிரண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கனமழை...

கனமழை...

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்றது. அப்போது திடீரென கனமழை பெய்துள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கு...

திடீர் வெள்ளப்பெருக்கு...

இதனால், காட்டுக்குள் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கொம்பன் படக்குழுவினரும் சிக்கிக் கொண்டனர்.

வனத்துறையினர் நடவடிக்கை...

வனத்துறையினர் நடவடிக்கை...

உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், கொம்பன் படக்குழுவை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ராமநாதபுரம்...

ராமநாதபுரம்...

இதையடுத்து, படப்பிடிப்பை ராமநாதபுரத்திற்கு மாற்றினர் படக்குழுவினர். இங்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான சில காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

அடுத்தபடம்...

அடுத்தபடம்...

‘கொம்பன்' படத்திற்கு பிறகு கார்த்தி, வெங்கடேசுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X