»   »  சூர்யா போயி… விஷால், கார்த்தி போயி… இப்ப விஷ்ணு விஷாலிடம் போயிருக்கும் முத்தையா!

சூர்யா போயி… விஷால், கார்த்தி போயி… இப்ப விஷ்ணு விஷாலிடம் போயிருக்கும் முத்தையா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மருது முடித்த கையோடு சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார் முத்தையா என்று சொன்னார்கள். இல்லை இல்லை விஷாலும் கார்த்தியும் இணையும் நடிகர் சங்க படத்தை இயக்கப்போகிறார் என்று ஒரு செய்தி வந்தது.

ஆனால் இரண்டுமே இல்லை என்பதுபோல இப்போது செய்திகள் வருகின்றன. சூர்யா அடுத்து விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதற்கு அடுத்து ராஜுமுருகனை வெய்ட்டிங்கில் வைத்துள்ளார். முத்தையா பற்றி வாயே திறக்கவில்லை.

Komban Muthaiya to direct Vishnu Vishal ?

விஷால் - கார்த்தி இணையும் நடிகர் சங்க படத்தை பிரபுதேவா இயக்கப் போகிறார் என்கிறார்கள். அது அநேகமாக இணைந்த கைகள் ரீமேக்காக இருக்கலாம்.

இவர்கள் யாரும் வேலைக்கு ஆக மாட்டார்கள் என்று விஷ்ணு விஷாலிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம் முத்தையா. அது ஓகே ஆனால் விஷ்ணு விஷாலை ஒரு கிராமத்து கெட்டப்பில் லட்சுமி மேனனுடன் பார்க்கலாம்.

English summary
Sources say that director Komban Muythaiya has approached Vishnu Vishal for his next project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil