Kombuseevi Day 2 Box Office - விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் கொம்புசீவி.. 2வது நாள் வசூல் என்ன தெரியுமா?

சென்னை: விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடித்திருக்கும் கொம்புசீவி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. பொன்ராம் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சரத்குமாரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பே அவர் ஹீரோவாக அறிமுகமானாலும் அவரால் இத்துறையில் நிலைக்க முடியவில்லை. கேப்டன் உயிரிழந்த பிறகு; இனி சினிமாதான் எதிர்காலம் என்பதை சீரியஸாக எடுத்துக்கொண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

கொம்புசீவி: அந்தவகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் படைத்தலைவன் படத்தில் நடித்தார். படம் தோல்வி. அதற்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சரத்குமார், தார்ணிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் பொன்ராம் கில்லாடி என்பதால் இப்படத்தின் மீது உச்சபட்ச நம்பிக்கையை வைத்திருந்தார் ஜூனியர் கேப்டன்.

Kombuseevi Day 2 Box Office Collection is 30 Lakh Rupees only in India
Photo Credit:

உண்மை சம்பவம்: பெரிய ஹைப்புகளோடு நேற்று முன்தினம் (டிச 20) தியேட்டர்களில் படம் வெளியானது. வைகை அணை கட்டப்பட்டபோது 12 கிராமங்கள் காணாமல் போயின. அந்த கிராம மக்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். பிழைப்பதற்கு வழி இல்லாததால் அவர்கள் தவறான வழியை தேர்ந்தெடுத்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தார் இயக்குநர்.

படம் எப்படி இருக்கு?: உண்மை கதையை அவர் எடுத்திருந்தாலும் தனது வழக்கமான ஸ்டைலில் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் படத்தில் வைத்த காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேபோல் வலியோடு சொல்லியிருக்க வேண்டிய கதையை இப்படி சொல்லியிருக்க வேண்டாம் என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால் சண்முக பாண்டியனின் நடிப்புக்கு அப்ளாஸ் கிடைத்திருக்கிறது. பல ஃப்ரேம்களில் விஜயகாந்த்தை பார்ப்பது போன்றே இருந்தது.

வசூல் எப்படி?: நல்ல பெயர் கிடைத்தாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது அவருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும் என்றே தெரிகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, நேற்றும் 30 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாகவும்; இரண்டு நாட்களில் மொத்தம் 60 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X