Komubseevi Day 3 Box Office - விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் கொம்புசீவி..3வது நாள் வசூல் சூப்பர்

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் அதீத நம்பிக்கையுடன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த திரைப்படம் கொம்புசீவி. சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. எப்படியும் தனக்கு பெரிய ஹிட் கிடைத்துவிடும் என்ற ஆவலில் இருந்த சண்முக பாண்டியனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்றாவது நாளில் படம் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம். அந்த வெற்றிகள்தான் சிவகார்த்திகேயனின் கமர்ஷியல் வேல்யூவுக்கு அதிகம் உதவி செய்து முதல் விதையை போட்டன. அவர் இப்போது விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியனை வைத்து கொம்புசீவி படத்தை இயக்கினார். ஏராளமானோருக்கு விஜயகாந்த் உதவினார்; அதேபோல் அவரது மகனும் சினிமாவில் வெல்வதற்கு உதவியாக தானும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தை எடுத்தார் பொன்ராம்.

ரிலீஸான படம்: இதில் சண்முக பாண்டியனுடன் சரத்குமாரும் நடித்திருக்கிறார். இவ்வருடத்தில் சரத் நடித்த டியூட் படம் ஹிட்டானது. முக்கியமாக அவர் ஏற்றிருந்த ரோலும் பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே இதிலும் அதேபோல் பெயர் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. இப்படி பல ஹைப்புகளோடு சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் படம் ரிலீஸானது. தேமுதிக தொண்டர்கள், சராசரி ரசிகர்கள் என பலரும் படத்தை பார்க்க சென்றார்கள்.

Kombuseevi Day 3 Box Office Collection is 36 Lakhs Rupees in india Shanmuga Pandiyan Shows Slight Growth
Photo Credit:

படம் சுமார்தான்: ஆனால் படம் சுமாராகவே இருந்தது. வைகை அணை கட்டப்பட்டபோது அழிந்த 12 கிராமங்களின் கதையை எடுத்திருக்கும் இயக்குநர்; தனது ஸ்டைலில் காமெடியாக டெலிவர் செய்ய முயற்சி செய்திருக்கிறார். அது முழுமையாக ஒர்க் அவுட் ஆகவில்லை. பல இடங்களில் காமெடி க்ரிஞ்சாக இருந்தது என்று ரசிகர்கள் விமர்சித்தார்கள். முக்கியமாக திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

சண்முக பாண்டியனுக்கு ஓகே: படத்தின் ரிசல்ட் சுமார் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. அதேசமயம் விஜயகாந்த்தின் மகன் ஸ்க்ரீனில் தோன்றும் பல ஃப்ரேம்களுக்கு தியேட்டரில் விசில் சத்தமும் கை தட்டலும் பறந்தன. அவருக்கென்று மவுசு இருப்பது இப்படத்தில் உறுதியானது. அவரது நடிப்பும் மோசம் எல்லாம் இல்லை. நிச்சயம் திரைத்துறையில் ஒரு ரவுண்டு வருவதற்கான அத்தனை சாராம்சங்களும் சண்முக பாண்டியனிடம் இருப்பதாகவே பலரும் சொன்னார்கள்.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் ரிலீஸான மூன்றாவது நாளில் கொம்புசீவி செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி நேற்று இப்படமானது 36 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். முதல் இரண்டு நாட்களில் இப்படம் தலா 30 லட்சம் ரூபாயை மட்டுமே கலெக்ட் செய்திருந்தது. மூன்றாவது நாளில் ஆறு லட்சம் ரூபாய் அதிகம் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்களில் மொத்தம் 66 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X