Kombuseevi Day 1 Collection - சண்முக பாண்டியனின் கொம்புசீவி முதல் நாள் வசூல் என்ன?..கேப்டன் மகனுக்கு வெற்றியா?

சென்னை: நடிகர் விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கள். நேற்று எதிர்பார்ப்புடன் வெளியான படத்துக்கு இதுவரை கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் அப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயகாந்த்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த வருடம் ஜூன் மாதம் படைத்தலைவன் வெளியானது. அந்தப் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்தை மீண்டும் தோன்றவெல்லாம் வைத்தார்கள். ஆனாலும் படம் பெரிதாக எடுபடவில்லை. தனது தந்தையின் வழியில் தானும் வெற்றிகரமான நடிகராக வலம் வர வேண்டும் என்ற முனைப்போடு இருந்த அவருக்கு பொன்ராமுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு அமைந்தது.

Kombuseevi First Day Collection Mixed Response for Shanmuga Pandiyan s Latest Release
Photo Credit:

கொம்புசீவி: அதன்படி கொம்புசீவி திரைப்படம் உருவானது. இதில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார், தார்ணிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் இசையமைத்திருக்கிறார். தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். சிவகார்த்திகேயனுக்கு இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது போல் விஜயகாந்த் மகனுக்கும் கொடுப்பாரா என்ற ஆவல் பலரிடம் இருந்தது.

நேற்று ரிலீஸ்: நேற்று படமானது பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் படம் பார்க்க சென்றார்கள். கேப்டன் மாதிரியே சண்முக பாண்டியனும் வெற்றி பெற்று திரைத்துறையில் நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையாகவும் இருந்தது. நேற்றைய முதல் நாள் முதல் காட்சி ரெஸ்பான்ஸை பார்த்தபோது விஜயகாந்த்துக்கு இன்னும் மவுசு குறையவில்லை; சரியாக செயல்பட்டால் அந்த மவுசை தன் பக்கம் சண்முக பாண்டியன் மடை மாற்றலாம் என்பது தெளிவாக புரிந்தது.

எப்படி இருக்கு படம்?: முதல் காட்சிக்கு ரசிகர்களின் கூட்டம் நன்றாக இருந்தாலும் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை; சில இடங்களில் மட்டும் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பது ரசிகர்களின் விமர்சனமாக இருந்தது. அதேசமயம் காமெடி, ஆக்‌ஷன், எமோஷனல் என அத்தனை ஏரியாக்களிலும் சண்முக பாண்டியன் தன்னை நிரூபித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கொம்புசீவி முதல் நாள் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, இந்தியாவில் மொத்தம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக தெரிகிறது. ஃபர்ஸ்ட் ஷோவுக்கு ஏகபோக ஆதரவு இருந்தாலும்; அந்தக் காட்சி முடிந்ததிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குறைந்ததால் வசூல் முதல் நாள் பாதிக்கப்பட்டிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 30 லட்சம் ரூபாய் என்பது கம்மிதான் என்றாலும் வரும் நாட்களில் டாப் கியரில் படத்தின் வசூல் செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X