விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு கொம்புசீவி ஹிட்டா இல்லையா?.. ட்விட்டர் விமர்சனம் இதுதான்
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படமான கொம்புசீவி இன்று திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸாகியிருக்கிறது. விஜயகாந்த்தின் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் ஆவலோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தார்கள். இந்நிலையில் படம் பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் முன்வைத்திருக்கிறார்கள்.
விஜயகாந்த்தின் மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் தனது தந்தை வழியில் நடிகராகியிருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பே அவர் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் பெரிய வெற்றியோ, வெளிச்சமோ கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து அவரது இடத்தை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் சினிமாவில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் இந்த வருடம் ஜூன் மாதம் படைத்தலைவன் படம் வெளியானது. ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை.
கொம்புசீவி: அந்தப் படத்தை முடித்துவிட்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்தார். இப்படத்தில் சரத்குமாரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கொம்புசீவிக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இன்று படமானது திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது.

ஓரளவு பாசிட்டிவ் விமர்சனம்தான்: விஜயகாந்த்துக்கு கிடைத்த வெற்றி மாதிரியே இந்தப் படத்திலிருந்து தனது வெற்றி பயணத்தை தொடங்குவாரா என்ற ஆர்வத்துடன் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தி கிடைத்ததாகவே தெரிகிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுவருகிறார்கள். படம் பார்த்த இந்த ரசிகர், "வழக்கமான கதைக்களம், அதை பொன்ராம் தன் வழக்கமான பாணியில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். சண்முக பாண்டியன் நடிப்பில் முந்தைய படங்களை விட நல்ல தேர்ச்சி. ஆக்சன் சீன் எல்லாம் புலிக்கு பிறந்தது பூனையாகுமா ரகம்.
சரத்குமார் படத்துக்கு பில்லர். பல இடங்களில் அவரை அவரே தாழ்த்திக் கொள்வது கூட காமெடியில் ஒர்க் அவுட் ஆகுது. ஹீரோயின் அழகு ஆனா நடிப்பில் எதுவோ மிஸ்ஸிங். யுவன் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாய் இருக்கிறது. பாடல்கள் திரையில் கேட்கும்போது ரசிக்க வைக்குது. கருப்பன் பாட்டு பக்கா மாஸ் வைப் பொன்ராம் முதல் பாதியை ஓரளவிற்கு காமெடி கலந்து ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் தடுமாறியது நல்லாவே தெரியுது. காமெடி அங்கங்க ஒர்க் ஆயிருக்கு. ஆனா படம் எதை நோக்கி போகுதுன்னு தான் புரியல. லாஜிக் எல்லாம் மறந்து அங்கங்க சிரிச்சுட்டு வரணும்னா நீங்க தாராளமா ஒருமுறை பாத்துட்டு வரலாம் கொம்புசீவி - ஓரளவு பாஞ்சுருக்கு" என குறிப்பிட்டிருக்கிறார்.
பக்கா குடும்ப படம்: இன்னொரு ரசிகர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "கொம்புசீவி பக்கா ஃபேமிலி என்ட்டெர்டெயினர் படமாக இருக்கிறது. சண்முக பாண்டியனுக்கு முதல் சூப்பர் ஹிட் கிடைத்திருக்கிறது. சரத்குமார் அடுத்தடுத்து தனித்துவமான ரோலை ஏற்றுவருகிறார்" என்று புகழ்ந்திருக்கிறார். அதேபோல் இன்னொரு ரசிகரும், கொம்புசீவி படம் ஹிட்தான் என்று ஃபயர் எமோஜி விட்டிருக்கிறார்.
மேலும் இன்னொரு ரசிகர், 'கொம்புசீவி முதல் நாள் முதல் காட்சி ஸ்ராங்காக ஆரம்பித்தது. முதல் பாதி நன்றாகவே க்ளிக் ஆகியிருக்கிறது. சரத்குமார் பெஸ்ட்டாக நடித்திருக்கிறார். சண்முக பாண்டியனும் நன்றாக நடித்துள்ளார்" என்று புகழ்ந்திருக்கிறார். இப்படி பெரும்பாலும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை படம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











