கொம்புவச்ச சிங்கம்டா: #ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வரும் நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை வெளியிட உள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி நேற்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது.
நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிடுகிறார்.
கொம்புவச்ச சிங்கம்டா என்ற அந்த பாடலை எழுதியிருப்பவர் அருண்ராஜா காமராஜ், இசையமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். ஜி.வி. என்றால் பெண்களை கிண்டல் செய்வது, மது போதையில் ஆடுவது என்று தான் மக்கள் நினைத்தனர். இந்நிலையில் அவர் ஜல்லிக்கட்டு பாடலை வெளியிடுவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications