twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒருத்தரையும் விடமாட்டாங்க போலிருக்கே... இவர் வாழ்க்கை கதையும் சினிமாவாகுதாம்!

    By
    |

    சென்னை: பிரபல முன்னாள் வெயிட் லிப்ஃடிங் வீராங்கனையின் வாழ்க்கை கதையும் சினிமாவாக இருக்கிறது.

    பிரபலங்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவது சினிமாவில் இப்போது அதிகரித்து வருகிறது.

    சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகளை சினிமாவாக எடுக்க இயக்குனர்கள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்

    தலை கீழாகத்தான் குதிப்பேன்.. திஷா படானியின் செம பல்டி.. வைரலாகும் வீடியோ! எல்லாம் இதுக்குத்தானாம்!தலை கீழாகத்தான் குதிப்பேன்.. திஷா படானியின் செம பல்டி.. வைரலாகும் வீடியோ! எல்லாம் இதுக்குத்தானாம்!

    ஸ்ரத்தா கபூர்

    ஸ்ரத்தா கபூர்

    கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, தடகள வீரர் மில்கா சிங், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரின் வாழ்க்கை கதைகள் சினிமாவானது. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இப்போது, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்.

    சபாஷ் மித்து

    சபாஷ் மித்து

    பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வாழ்க்கைக் கதையை, நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். அவர், பயிற்சியாளராகவும் நடிக்கிறார். பி.வி.சிந்துவாக யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. இதே போல, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இதில் பிரபல நடிகை டாப்ஸி நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சபாஷ் மித்து என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    கர்ணம் மல்லேஸ்வரி

    கர்ணம் மல்லேஸ்வரி

    இந்நிலையில் பிரபல வெயிட்லிப்ஃடிங் வீராங்கனை, கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை கதையும் படமாகிறது. ஆந்திராவை சேர்ந்த மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண். கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் அதுதான்.

    கோனா வெங்கட்

    கோனா வெங்கட்

    இந்நிலையில் பிரபல தெலுங்கு ஸ்கிரிப்ட் டைரட்டரும் தயாரிப்பாளருமான கோனா வெங்கட், இவரது வாழ்க்கை கதையை படமாக்குகிறார். இதற்கான உரிமையை அவரிடம் இருந்து கோனா வெங்கட் பெற்றுள்ளார். படத்தை இயக்க, இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இயக்குனர்களை அவர் தேடி வருகிறார். இந்தப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட சில மொழிகளில் தயாராக இருக்கிறது. மல்லேஸ்வரியாக நடிக்கும் நடிகை தேர்வு நடக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    English summary
    Script writer and producer Kona Venkat,met Karnam Malleswari recently and acquired the rights to make a film.He is said to be in talks with directors from Tollywood and Bollywood to helm this project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X