கொண்டா ரெட்டி கோட்டை…மகேஷ்பாபுவுக்கு ஒக்கடு செண்ட்டிமென்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா

ஹைதராபாத்: ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொண்டாரெட்டி கோட்டை செட்டில் மகேஷ்பாபு நடிக்கும் சரிலேறு நீக்கேவறு படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியும் சண்டைக்காட்சியும் எடுக்கப்படுவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இக்கோட்டை செட்டில் தான் 16 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த ஒக்கடு திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. அத்திரைப்படமும் அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிக பெரிய ஸ்டூடியோ காம்ப்லெக்ஸ் என கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள ஐதராபாத்தின் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி பற்றி அறியாதவர்கள் எவரும் இலர்.

Konda Reddy Fort Set recreates for Sarileru Neeekewaru Movie

அங்கு ஆந்திராவின் மிகவும் பிரபலமான கோட்டையானா கர்னூல் கோட்டை என்றும் கொண்டாரெட்டி கோட்டை என்றும் அழைக்கப்படும் மிக பெரிய கோட்டையின் ஷூட்டிங் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது யாருக்காக அமைக்கப்பட்டுள்ளது என்றால், அதிக அளவிலான ரசிகர் பட்டாளத்தின் தலைவன், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்காகத்தான்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அணில் ரவுபுடி இயக்கி வரும் சரிலேறு நீக்கேவரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மகேஷ் பாபு. இப்படத்திக்காக தான் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பிரமாண்டமான கொண்டாரெட்டி கோட்டை செட் உருவாகியுள்ளது.

இந்த கோட்டைக்கும் மகேஷ் பாபுவிற்கு ஒரு நீண்ட நெடிய தொடர்பு உண்டு. மகேஷ் பாபுவிற்கு தென்னிந்திய திரையுலகில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ஒக்கடு (கில்லி). இப்படம் மகேஷ் பாபுவிற்கு நல்ல ஒரு பெயரை பெற்று தந்தது.

இப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜை வெளுத்து வாங்கிவிட்டு படத்தின் நாயகியான பூமிகாவை காப்பாற்றிக்கொண்டு செல்லும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த காட்சி இந்த கோட்டையின் பின்னணியில் தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த கோட்டை மகேஷ் பாபுவிற்கு மிகவும் ராசியான இடம் என்பதால், தற்போது எடுக்கப்பட்டு வரும் புதிய படத்திற்காக இந்த கொண்டாரெட்டி கோட்டையின் பிரமாண்டமான செட் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த செட்டில் ஒரு சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்டிமெண்டாக இப்படமும் மகேஷ் பாபுவின் வெற்றிப்படங்களின் வரிசையில் ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X