என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு வரிசையில் கொஞ்சம் பேசு!.. பாடல் குறித்து சுவாரசிய பேட்டி
சென்னை: என்ஜாய் எஞ்சாமி, குட்டி பட்டாசு என தமிழில் ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Recommended Video
அந்த வரிசையில் கொஞ்சம் பேசு பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரதீப் குமார், நித்யஸ்ரீ இந்த பாடலை பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இப்பாடலை குறித்து பாடலின் இசையமைப்பாளர், நடிகர் & நடிகை ஃபில்மி பீட் தமிழுக்கு பேட்டியளித்துள்ளனர்.

சஞ்சய், சஞ்சிதா, நரேன்
இந்த பாடலை இயக்குனர் ராஜூமுருகன் தயாரித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சஞ்சய் இதில் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். 18 வயது உடைய நரேன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானிடத்தில் இசை கற்றவர்.

குற்றாலத்தில் படப்பிடிப்பு
இந்த பாடலுக்கு குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்தது எனவும், நரேன் & சஞ்சயின் குடும்பம் பொள்ளாச்சியில் இருந்ததால் படப்பிடிப்பு போல் இல்லாமல் ஸ்மால் ட்ரிப் போனது போல அனுபவம் கிடைத்தது என சஞ்சிதா ஷெட்டி பேட்டியளித்துள்ளார்.

முக்கியத்துவம் அளிக்கிறது
காதலர்கள், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் விரிசல் பிரிவாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவத்தை குறித்து சஞ்சய் & சஞ்சிதா ஷெட்டி பேட்டியளித்துள்ளனர்.

Array
தொடர்ந்து பேசிய சஞ்சய் & சஞ்சிதா தங்களுடைய ஃபேவரைட் கப்புள் யாரென்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளனர். சஞ்சிதா ஷெட்டி சூர்யா & ஜோதிகா தான் தனக்கு பிடித்த கப்புள் என கூறியுள்ளார். சஞ்சய் தன்னுடைய அப்பா & அம்மா தான் தனக்கு பிடித்த கப்புள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











