பிரபல நடிகை திடீர் விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. மகனுக்காக நட்பை மட்டும் தொடர்வார்களாம்!
மும்பை: பிரபல நடிகை, காதல் கணவரிடம் இருந்து திடீரென விவாகரத்து பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில், காதலித்து திருமணம் செய்யும் நடிகர், நடிகைகள் விவாகரத்து பெறுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் காதல் கணவரிடமிருந்தோ, மனைவியிடம் இருந்தோ விவாகரத்து பெற்றுள்ளனர்.

கொங்கனா சென்
இந்நிலையில் மேலும் ஒரு காதல் ஜோடி விவாகரத்து பெற்றிருக்கிறதுது. பிரபல இந்தி மற்றும் பெங்காலி நடிகை கொங்கனா சென் சர்மா. இவர் பிரபல பெங்காலி இயக்குனர் மற்றும் நடிகை அபர்ணா சென்னின் மகள் இவர். மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஐயர், டிராபிக் சிக்னல், ஃபேஷன், லக்கி பை சான்ஸ், தல்வார், அகிரா உள்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சில ஆங்கில மற்றும் பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருதுகள்
எ டெத் இன் த கஞ்ச் உள்பட சில படங்களை இயக்கி உள்ளார். டிவி மற்றும் வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக இரண்டு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தன்னுடன் நடித்த இந்தி நடிகர் ரன்விர் ஷோரியை, கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தார். இருவரும் ஆஜா நாச்லே, டிராபிக் சிக்னல் உள்பட சில படங்களில் ஒன்றாக நடித்தனர்.

காதல் திருமணம்
அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு, எளிமையாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர், இதை தனது சமூக வலைதளப்பக்கம் மூலம் அறிவித்தார், நடிகை கொங்கனா சென் சர்மா. இவர்களுக்கு ஹரூன் என்ற மகன் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு
இந்நிலையில் ரன்விர் ஷோரிக்கும் கொங்கனா சென்னுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தனர். மகன் ஹரூனுக்காக இருவரும் நண்பர்களாக தொடர்வதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இவர்கள் அதிகாரபூர்வமாக விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

பரஸ்பரம் விவாகரத்து
இவர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன், நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது. இதுபற்றி நடிகை கொங்கனா சென், 'நானும் ரன்விரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றுவிட்டோம். ஆனால், மகனின் எதிர்காலத்துக்காக நாங்கள் நண்பர்களாகத் தொடர்வோம்' என்று தெரிவித்துள்ளார். நடிகர் ரன்விர் ஷோரி, இந்தியில், ஏக் சோட்டீஸே லவ் ஸ்டோரி, ஜிஸிம், லக்ஷ்யா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











