சாந்தினி கையை கடிக்கப்போறாரே.. கூமாபட்டி தங்கபாண்டி என்ன செய்றாரு பாருங்க?.. அலப்பறைக்கு முடிவே இல்லையா?
சென்னை: ஏங்க எங்க கூமாபட்டிக்கு வாங்க என்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனவர் தங்கபாண்டி. சோஷியல் மீடியாவில் பிரபலமான அவருக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சாந்தினியுடன் நடனம் ஆடினார். அந்த நிகழ்ச்சியில் தங்கபாண்டிதான் டைட்டில் வின்னராகவும் ஆகியிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
சோஷியல் மீடியா பெருகிவிட்ட காலம் இது. பலரும் தங்களுக்கென்று தனியாக பேஜையோ, யூடியூப் சேனலையோ நடத்தி தங்களது திறமையை வீடியோவாக பதிவு செய்து அதன் மூலம் புகழையும், வருமானத்தையும் அறுவடை செய்கிறார்கள். பலர் அந்த ஃபார்முலாவை ஃபாலோ செய்து ஜொலித்திருக்கிறார்கள்; பலர் காணாமல் போயிருக்கிறார். அப்படி ஜொலித்தவர்களில் ஒருவர்தான் கூமாபட்டியை சேர்ந்த தங்கபாண்டி என்பவர்.
யார் இந்த தங்கபாண்டி: இவர் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் கூமாபட்டியில்தான் இருக்கிறார். அங்கு இருக்கும் ஒரு அணையில் குளிக்க சென்றபோது, 'ஏங்க எங்க கூமாபட்டிக்கு வாங்க. தண்ணியெல்லாம் சர்பத் மாதிரி இனிக்கும்' என பேசி வீடியோவாக வெளியிட்டார். தண்ணீர் மட்டுமின்றி தனது ஊரை வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு; அவைகளைவிடவும் கூமாபட்டிதான் டாப் என்று தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்.

ஒரே நைட்டில் ஃபேமஸ்: அப்படி அவர் வெளியிட்ட வீடியோக்கள் சில இணையத்தில் ட்ரெண்டாகிவிட்டன. பல யூடியூப் சேனல்கள் அவரை அழைத்து பேட்டிகளும் எடுத்தன. அந்தப் பேட்டியில் பேசியபோதுதான் தெரிந்தது, தங்கபாண்டி இதனை எதேச்சையாக செய்யவில்லை; தானும் தனது ஊரும் பிரபலமடைய வேண்டும் என்பதை திட்டமிட்டுதான் செய்தார் என்பது. முக்கியமாக மக்களின் மனநிலையை பிடிக்கும் நோக்கத்தில் பல புத்தகங்களையும் படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேனலில் வாய்ப்பு டூ டைட்டில் வின்னர்: சோஷியல் மீடியாவில் பிரபலமானதைத் தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சின்னத்திரை நடிகை சாந்தினியுடன் சேர்ந்து ஏராளமான பாடல்களுக்கு நடனமாடினார். அப்போது அவர் செய்யும் குறும்புகள் என அத்தனையும் ட்ரெண்டாகின. ஒருவழியாக அந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் வென்று டைட்டில் வின்னராகவும் மாறிவிட்டார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது அந்த நிகழ்ச்சியின் செட்டில் ஜவ்வு மிட்டாயை வைத்து கையில் வாட்ச் செய்துகொள்கிறார் சாந்தினி. அப்போது அருகே வந்த சிறிது நேரம் நின்ற அவர்; சாந்தினியின் கையில் கட்டியிருந்த அந்த மிட்டாய் வாட்சை உண்பதற்கு வாயை கொண்டு செல்ல; உஷாரான சாந்தினி கையை வெடுக்கென்று எடுத்துக்கொண்டார். இதனால் தங்கபாண்டிக்கு ஏமாற்றமே கிடைத்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்; தங்கபாண்டியிடம் இந்த சாந்தினி பொண்ணு சிக்கி படாத பாடு படுதே ப்பா என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











