twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெய்வ் மோலோடிஸ்ட் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘கூழாங்கல்‘

    |

    சென்னை : கூழாங்கல் திரைப்படம் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த திரைப்படம் ஏற்கனவே 50 வது சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமில் புலி விருதை வென்றது.

    இந்த மதிப்புமிக்க கௌரவத்தை வென்ற முதல் தமிழ் படம் என்ற பெருமை கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

    தயாரிப்பு நிறுவனம்

    தயாரிப்பு நிறுவனம்

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரவுடி பேபி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, பல வெற்றிப்படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்ற நிலையில், அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தின் தயாரிப்பு உரிமையை பெற்றனர்.

    சிறந்த திரைப்படம்

    சிறந்த திரைப்படம்

    கடந்த மார்ச் மாதம் நியூயார்க்கில் நீயூ டைரக்டர்ஸ் நீயூ திரைப்பட விழாவில் கூழாங்கல் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வெகுவாக பாராட்டி இருந்தனர்.

    கூழாங்கல் திரையிட தேர்வு

    கூழாங்கல் திரையிட தேர்வு

    இந்நிலையில் உக்ரைனினில் ஆண்டு தோறும் நடைபெறும் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மே 29 மற்றும் ஜூன் 6 என இருமுறை இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இது கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.

    Recommended Video

    Free Film Course For Lower cast students| Vetrimaaran speech | Filmibeat Tamil
    இசை

    இசை

    ஒரு குடிகார தந்தை மற்றும் அவரது மகனை வைத்தே கதை நகர்கிறது. இதில், புது முக நடிகர்களான கருத்தையன் மற்றும் செல்ல பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மேலும் வலுசேர்க்கிறது. பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

    Read more about: international film
    English summary
    Koozgangal is selected for screening in Molodist internation film festival
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X