Koozhangal Blue Sattai Maran Review: ”விருதுகளுக்கு தகுதியான படம்..” கூழாங்கல் ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கியுள்ள திரைப்படம் கூழாங்கல்.

பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற இத்திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

எதார்த்தமாக உருவாகியுள்ள கூழாங்கல் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், கூழாங்கல் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் வழங்கிய விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

 Koozhangal Blue Sattai Maran Review: Blue Sattai Maran gave a positive review for the Koozhangal film

கூழாங்கல் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
வினோத்ராஜ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கூழாங்கல், தற்போது சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ரொம்பவே எதார்த்தமான வாழ்வியல் பின்னணியுடன் வெளியாகியுள்ள கூழாங்கல், சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. மேலும், இந்தியா சார்பில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிதுரைக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

குடும்ப பிரச்சினை காரணமாக அம்மா, அப்பா வீட்டுக்குச் சென்ற மனைவியை, அவரது கணவரும் மகனும் மீண்டும் அழைத்துவர முயற்சிக்கும் ஒருவரிக் கதை தான் கூழாங்கல். ஆனால் அதனை சிறப்பான திரைக்கதை மூலம் தரமாக கொடுத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். அதாவது, பள்ளிக்கூடத்தில் இருக்கும் சிறுவனை அவனது அப்பா பாதியிலேயே கூட்டிட்டுப் போகிறான்.

போகுற வழியில் அவங்க ரெண்டு பேரும் ஒரு பாலடைந்த மண்டபத்துக்கு போறாங்க. அங்க அந்த ஊர் ஆம்பளைங்க எல்லாம் படுத்துக் கிடப்பதும், சீட் ஆடிட்டும் இருக்குறது தான் வேலையே. அதப் பார்க்கும் போதே அந்த ஊர் ஆம்பளைங்களோட லட்சணம் என்னன்னு தெரியும். அங்க ஒருத்தன்கிட்ட 300 ரூபா கடன் வாங்கிட்டு, அப்பனும் மகனுமாக எங்கேயோ போகிறார்கள்.

அதுக்கு நடுவுலயே அந்த அப்பன் ஒரு பத்து பீடியாவது பத்த வச்சிருப்பான். அதோட பாதி சரக்கு அடிச்சிட்டு மீதிய சொருகி வச்சிட்டு . பஸ்காக காத்திருப்பான். அப்புறம் பஸ்ல ஏறினதும் அதுல இருக்குற ஒருத்தன்கிட்ட சண்டை போடுவான். கடைசியா ரெண்டு பேரும் பஸ்ல இருந்து இறங்கி எங்கேயோ போறாங்க. எங்கடான்னு பார்த்தா... கோவிச்சிட்டுப் போன பொண்டாட்டிய மாமியார் வீட்ல இருந்து கூப்டறதுக்கான்னு தெரியுது.

அங்கேயும் மாமியார்கிட்ட சண்டைய போடும் போதுதான் தெரியுது, அவனோட பொண்டாட்டி இவங்க வர்றதுக்கு முன்னாடியே கிளம்பி ஊருக்கே போய்டுச்சுன்னு. இப்போ அப்பனும் மகனுமா கிளம்பி நடந்தே அவங்களோட ஊருக்குப் போறாங்க. அதுக்கு அப்புறமா என்னாச்சுங்குறது தான் கதை. இத எந்தளவுக்கு உண்மைக்கு நெருக்கமா சொல்ல முடியுமோ அந்தளவுக்கு எடுத்துருக்காங்க.

கதையை கூட முழுவதுமாக சொல்லாமல், அதாவது மனைவி ஏன் வீட்டை விட்டு போயிருப்பார் என்பதை கூட, அப்பனும் மகனும் பண்ற சேட்டையை வச்சு தெரிஞ்சுக்கலாம். இந்த மாதிரி ஆளுகூடலாம் எப்படி குடும்பம் நடத்த முடியும், அது கோவிச்சுட்டுப் போனது சரிதான் என்பதாக பிரில்லியண்டான திரைக்கதையில் இந்தப் படத்தை எடுத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

இந்தப் படம் பெரும்பாலும் அப்பனும் மகனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு நடந்து செல்வது தான். அப்போது அந்த சிறுவன் ஒரு கூழாங்கல்லை எடுத்து வாயில் போடுவான். இதனால் தான் இந்தப் படத்தின் டைட்டில் கூழாங்கல் என நினைத்தால், அதனை வீடு சென்றதும் ஒரு இடத்தில் வைப்பான். அதுதான் இந்த கதையின் வீரியம் என்றுள்ளார். அதேபோல், படம் முழுக்க சிங்கிள் ஷாட் சீன்கள் அதிகம் இருப்பதும் ரசிக்க வைத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் பாராட்டியுள்ளார்.

அதேபோல், முன்னலாம் படங்களுக்கு விருது கொடுப்பாங்க, இப்ப அப்படி இல்ல கேட்டு விருது வங்குறாங்க. சிலருக்கு விருது கொடுக்கலைன்னா வம்பாகிடும்ன்னு நினைச்சே விருது கொடுக்குறாங்க என பார்த்திபனை மறைமுகமாக கலாய்த்துள்ளார். ஆனால், கூழாங்கல் உலக சினிமா தரத்தில் இருப்பதால், சர்வதேச விருதுகளுக்கு தகுதியானது தான் எனவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக கூழாங்கல் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்காது எனவும், யதார்த்தமான திரைப்படங்களை பார்த்து பழகியவர்கள் மட்டுமே ரசிக்க முடியும் எனவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X