சிறப்புகளை குவிக்கும் கூழாங்கல் படம்... மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு
சென்னை : அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல்
இதன் வெளியீட்டு உரிமையை தனது ரவுடி பிக்சர்சிற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாங்கியுள்ளனர்.
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ள இந்த படம் தற்போது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதிவரை திரையிடப்பட உள்ளது.

தந்தை -மகன் உறவு
அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை சிறப்பான வகையில் சொல்லும் இந்த கதையில் தந்தையுடன் இணைந்து பிரிந்து போன தாயை மீண்டும் வீட்டிற்கு கொண்டுவருவதாக கதைக்களம் அமைந்துள்ளது.

தமிழ் படத்திற்கு முதல் விருது
இந்த படம் ஏற்கனவே ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டு டைகர் விருது பெற்றுள்ளது. தமிழில் இந்த விருதை பெற்ற முதல் படம் இது என்பது படத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. முன்னதாக கடந்த 2017ல் செக்ஸி துர்கா என்ற மலையாள படம் இந்த விருதை பெற்றுள்ளது.

திரையிட தேர்ந்தெடுப்பு
இந்நிலையில் தற்போது மோலோடிஸ்ட் சர்வதேச பட திருவிழாவில் இந்த படம் 29ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதிவரை திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாங்கியுள்ளனர்.
Recommended Video

விக்னேஷ் சிவன் -நயன்தாரா பாராட்டு
இந்த திரைப்படத்தின் தலைப்பை போலவே படம் எளிமையாக இருந்தாலும் அது தங்களுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருவரும் முன்னதாக தெரிவித்திருந்தனர். முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்ட போது நயன்தாரா -விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் அங்கு நேரில் சென்றிருந்தனர்.

விக்னேஷ் சிவன் பெருமை
இந்நிலையில் தற்போது மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பெருமை படுவதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தங்களுடைய ரவுடி பிக்சர்சின் முதல் வெளியீடு இந்த படம் என்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











