இப்படி ஆயிடுச்சே... ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய படம்... அப்செட்டான விக்னேஷ் சிவன்!

சென்னை: ரவுடி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

Recommended Video

ஆஸ்கர் போட்டியில் Exitஆன கூழாங்கல்: செம சோகத்தில் விக்னேஷ் சிவன்!

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் 'கூழாங்கல்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இயக்குனர் வினோத்ராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடித்தளமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்பட விழாக்களில்..

திரைப்பட விழாக்களில்..

கடந்த பிப்ரவரி மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற 50 ஆவது இராட்டர்டாம் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதனை தொடர்ந்து தென் கொரிய திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழா போன்றவற்றிலும் கூழாங்கல் படம் திரையிடப்பட்டது.

ஆஸ்கருக்கு பரிந்துரை

ஆஸ்கருக்கு பரிந்துரை

பல்வேறு திரைப்பட விழாக்களுக்கும் இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் 'கூழாங்கல்' திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கும் கூழாங்கல் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் விருது விழா வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

ஆஸ்கரில் இருந்து வெளியேறிய கூழாங்கல்

ஆஸ்கரில் இருந்து வெளியேறிய கூழாங்கல்

'கூழாங்கல்' திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து 'கூழாங்கல்' திரைப்படம் வெளியேறியிருக்கின்றது. இதனால் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தப்பட்டுள்ளார்.

 மகிழ்ச்சியும் பெருமையும்

மகிழ்ச்சியும் பெருமையும்

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதே பெரிய சாதனை. இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்தால் எங்களைப் போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு, நாம் கொண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X