ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ள நயன்தாரா படம் தியேட்டரில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி உள்ள கூழாங்கல் திரைப்படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
பல சர்வதேச விருதுகளை அள்ளி உள்ள கூழாங்கல் திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவுக்காக இந்தியா சார்பில் போட்டியிட தேர்வாகி உள்ளது.
இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூழாங்கல் திரைப்படம் இன்னமும் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தயாரிப்பு
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடத்தி வரும் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் ஒளிபரப்பட்டு விருதுகளை குவித்து வந்தது. இந்த படத்தை தயாரித்ததில் மிகவும் பெருமை கொள்வதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.

ஆஸ்கர் போட்டி
கடந்த ஆண்டு மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு திரைப்படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைத்த இந்திய திரையுலகம் இந்த ஆண்டு தமிழ் படமான கூழாங்கல் திரைப்படத்தை ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.

தியேட்டர் ரிலீஸ்
விருது விழாக்களிலேயே திரையிடப்பட்டு வரும் கூழாங்கல் திரைப்படம் சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது தந்து ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் எப்போ
இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் கடைசி வரை படத்தை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டீர்களா? என்றும் இந்தியாவில் எப்போ ரிலீஸ்னு சொல்லுங்க விக்னேஷ் படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் ஏற்கனவே படம் இணையத்தில் லீக்காகி பார்த்தே விட்டோம் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
இந்த டிசம்பரில் சிங்கப்பூரில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி உள்ள கூழாங்கல் திரைப்படம் வெளியாகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் டிசம்பரில் தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்குருவி அப்டேட்
கூழாங்கல் படம் சிங்கப்பூர் திரையரங்குகளில் வெளியாகும் அறிவிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நிலையில், அவர் தயாரிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள நடிகர் கவினின் ஊர்குருவி படத்தின் அப்டேட் கொடுங்க என கவின் ஆர்மியினர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











