Devara Public Review: என்னத்த சொல்ல.. டிக்கெட் காசு தான் வேஸ்ட்.. தேவாரா மக்கள் கருத்து!
சென்னை: ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவாரா பார்ட் 1 இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியாகி உள்ள படம் குறித்து, ரசிகர்கள் பலர் ட்விட்டரில் கருத்தை தெரிவித்து வரும் நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ராம்சரண், ஜூனியர் எட்டியார் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம். எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை அள்ளிய இத்திரைப்படம் ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளை குவித்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் வெளியாகாத நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படம் டோலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்தது.

தேவாரா 1: இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கத்தில் யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என். டி. ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், பாலிவுட் ஸ்டார் சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீ காந்த், கலையரசன் உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் கருத்து: இந்நிலையில் 'தேவாரா' பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் இன்று வெளியாகி உள்ளது. படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில், படம் பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். அதில், ரசிகர் ஒருவர் இயக்குநர் கொட்டாலா சிவா, ராம்சரணை வைத்து ஆச்சாரிய படம் எடுத்து அவரை காலி செய்தார். இப்போது தேவாரா படத்தை எடுத்து ஜூனியர் என்.டி.ஆரை காலி செய்துவிட்டார். என்னத்த சொல்வது, டிக்கெட் காசு தான் வேஸ்ட் என்று கூறினார்.
மோசமான கிளைமாக்ஸ்: மற்றொரு ரசிகர், கிளைமாக்ஸ் காட்சி ரொம்ப மோசமான இருக்கு, முதல் பாதி ஒகே, இரண்டாம் பாதி செம போராக இருந்தது. கதை எங்கையோ ஆரம்பித்து எங்கே செல்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு என்னவென்றே தெரியவில்லை. அந்த கிளைமாக்ஸ் காட்சியால் படமே மோசமாகிவிட்டது. சலார், பாகுபலி போன்ற படத்தின் பார்ட் இரண்டாம் பாகத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் தேவையே இல்லை என்று கொந்தளித்தனர்.
கொளுத்திய ரசிகர்கள்: காலையில் தேவாரா படம் ரிலீஸ் ஆன போது, போஸ்டருக்கு பால் அபிஷேகம், பூமாலை போட்டு கொண்டாடிய ரசிகர்கள், இன்னும் ஒருபடி மேலே சென்று ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து ரத்தத்தால் அபிஷேகம் செய்து அனைவரையும் பதறவைத்தனர். இதையடுத்து, ஹைதராபாத்தில் தேவாரா எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், ரசிகர்கள் சிலர் கட் அவுட்டை கொளுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், தியேட்டர் நிர்வாகம் படம் பார்க்க வந்த ரசிகர்கள் வெடித்த பட்டாசு கட் அவுட்டின் மீது பட்டதால், தீ பிடித்ததாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications