twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாய்லாந்து ஆழ்கடலில் அரிய மீன்களைப் பிடித்த விவகாரம்.. ‘மான்ஸ்டர்’ நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை!

    நீருக்கு அடியில் மீன்களை பிடித்த தொலைக்காட்சி பிரபலம்- 5 வருட சிறை தண்டனையில் சிக்கிய நடிகை

    |

    பாங்காக்: தாய்லாந்தில் ஆழ்கடலில் மீன் பிடித்த குற்றத்திற்காக, நடிகை ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாட்டிற்கு நாடு சட்டதிட்டங்கள் வேறுபடும். அந்த வகையில், தாய்லாந்தில் நீருக்கு அடியில் இருக்கும் உயிரினங்களை உரிய அனுமதி இல்லாமல் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். விதியை மீறுபவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்படும்.

    Korean actress faces five years imprisonment for underwater scene

    பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா?: அட்லி, மனைவியை திட்டும் நெட்டிசன்ஸ் பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா?: அட்லி, மனைவியை திட்டும் நெட்டிசன்ஸ்

    இந்நிலையில், பிரபல கொரிய நடிகையான லீ யோல்-யம், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தாய்லாந்தில் ஆழ்கடலுக்கு சென்று சில அரிய வகை மீன்களைப் பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியானது கடந்த மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

    அதன் தொடர்ச்சியாக லீ மீது தாய்லாந்து போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு அபராதமும், 5 வருட சிறை தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    லீ, தி கிங் உள்ளிட்ட கொரிய படங்களில் நடித்தவர். மான்ஸ்டர் சீரிஸிலும் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் தென்கொரியாவில் தங்கி உள்ளார். இவர் மீண்டும் தாய்லாந்து வரும் போது கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

    Read more about: korean
    English summary
    The Thailand court have sentenced five years imprisonment to Korean actress Lee Yeol-eum, for performing a underwater scene and catching the endangered species clams.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X