அடக்கடவுளே.. 32 வயதில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல கொரிய நடிகர்.. மரணத்திற்கான காரணம் என்ன தெரியுமா?

சியோல்: பிரபல தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே (Park Min Jae) பரிதாபமாக உயிரிழந்தது கே டிராமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு சுற்றுலா மேற்கொண்ட நிலையில், திடீரென பார்க் மின் ஜே உயிரிழந்தது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் நடிகரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வயது மூப்புக் காரணமாக சினிமா பிரபலங்கள் உயிரிழந்தாலே ரசிகர்களால் தாங்க முடியாத சூழலில் நன்றாக நடித்துக் கொண்டு சினிமாவில் வளர்ந்து வரும் பார்க் மின் ஜே திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்துக்கான காரணம் என்ன என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

k drama cardiac arrest

கடந்த நவம்பர் 29ம் தேதி கொரிய நடிகர் பார்க் மின் ஜே உயிரிழந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், நாளை டிசம்பர் 4ம் தேதி சொந்த ஊரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாகவும் நடிகரின் ஏஜென்சி அறிவித்துள்ளது.

கொரிய நடிகர் மரணம்: உலகளவில் இளம் வயது மரணங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும், அதிக பிரஷர் கொண்ட சினிமா துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வயது மரணங்கள் உலகளவில் அதிகம் நிகழ்கின்றன. கொரியாவில் ஏகப்பட்ட இளம் நடிகைகளின் தற்கொலை மரணங்கள் மற்றும் மர்ம மரணங்கள் சமீப காலமாக அதிக அதிர்ச்சிகளை கொடுத்து வரும் சூழலில் 32 வயதான நடிகர் பார்க் மின் ஜே கடந்த நவம்பர் 29ம் தேதி உயிரிழந்தது ஒட்டுமொத்த கொரிய சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பார்க் மின் ஜே மரணத்திற்கான காரணம்: கொரியா - கித்தான் வார், டுமாரோ மற்றும் லிட்டில் உமன் உள்ளிட்ட கொரிய சீரிஸ்களில் நடித்து பிரபலமானவர் தான் பார்க் மின் ஜே. சமீபத்தில், சீனாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர் உயிரிழந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மாரடைப்புக் காரணமாகத்தான் பார்க் மின் ஜே உயிரிழந்து இருப்பதாக அவரது ஏஜென்சி தற்போது அதிகாரப்பூர்வமாக மரணத்திற்கான காரணத்தை அறிவித்துள்ளது. பிக் டைட்டில் மற்றும் கே - மீடியா நிறுவனத்தின் நடிகரான இவரது மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அந்த நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள ஃப்யூனரல் ஹாலில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி காலை 9.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X