twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓவராக கலாய்த்த நெட்டிசன்கள்.. தீவிர மன அழுத்தத்துக்கு ஆளான இளம் பாடகி திடீர் மரணம்.!

    நெட்டிசன்களின் கேலியால் தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாப் பாடகி சல்லி மரணமடைந்தார்.

    |

    Recommended Video

    Watch Video : korean pop singer Sulli

    சியோல்: தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாப் பாடகி சல்லி மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரியாவில் இயங்கி வரும் பிரபல பாப் பாடல் குழு கே பாப் குரூப். இந்த குழுவை சேர்ந்தவர் 25 வயதேயான சல்லி. இவர் இந்த குழுவின் முக்கிய பாடகியாக வலம் வந்தார்.

    found

    கடந்த 2014ம் ஆண்டோடு பாப் குழுவில் பாடுவதை சல்லி நிறுத்திக்கொண்டார். மிக அதிகமான மன அழுத்திற்கு சல்லி ஆளானதன் காரணமாகவே பாடுவதை நிறுத்திவிட்டதாக அப்போது கூறப்பட்டது. நெட்டிசன்களால் சல்லி கடுமையாக கேலி செய்யப்பட்டதே அவரது மன அழுத்தத்திற்கு காரணம்.

    ஒரு ஆண்டு கழித்து ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பேசிய சல்லி, மிக நெருக்கமானவர்கள் கூட தன்னை தனியேவிட்டு சென்றுவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டார். தன்னை புரிந்துகொள்ள யாருமே இல்லை என்றும், எல்லாரும் தன்னை காயப்படுத்துவதாகவும் சல்லி வருத்தப்பட்டிருந்தார்.

    மேலும் கடந்த மாதம் இன்ஸ்ட்ராகிராமில் சல்லி லைவ் சேட்டில் வந்தார். அப்போதும் அவரை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்தனர். இதையடுத்து அவர் லைவ்வில் கதறி அழுதார்.

    என்னோட சிஷ்யனா நீ? சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்!என்னோட சிஷ்யனா நீ? சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்!

    இந்நிலையில் நேற்று தன்னுடைய வீட்டில் மர்மமான முறையில் சல்லி இறந்துகிடந்தார். அவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்லி இறந்து போன செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

    அவரை கேலி செய்த பலரும் இப்போது வருத்தப்பட்டு பதிவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் விளையாட்டாக செய்த காரியம். ஒரு உயிரையே பறித்துவிட்டதே. இனி என்ன வருத்தப்பட்டு, என்ன பயன்?

    English summary
    The 25 years old South Korean pop star Sulli was found dead at her residence on Monday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X