ஆக்ஷன் காமெடிக்கு அதிரி புதிரி ரெடி... ரெஜினா, நிவேதாவுக்கு கொரிய ஃபைட் மாஸ்டர்கள் பயிற்சி
சென்னை: கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ரெஜினாவுக்கும் நிவேதா தாமஸுக்கும் கொரிய ஃபைட் மாஸ்டர்கள் சண்டை பயிற்சி அளிக்க உள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கிய, கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ரெஜினா. இந்த படம் ஹிட்டானது.
தொடர்ந்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் சிலுக்குவார்பட்டி சிங்கம் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கொரிய ரீமேக்
இவர் இப்போது, திருடன் போலீஸ் பட இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கும் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் அஸ்ட்ராலஜராக அவர் வருகிறார். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோயினாக அக்ஷரா கவுடா நடிக்கிறார். இந்நிலையில் அவர் கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

மிட்நைட் ரன்னர்ஸ்
2017 ஆம் ஆண்டு வெளியான கொரிய ஆக்ஷன் காமெடி படம், மிட்நைட் ரன்னர்ஸ்.ஜேசன் கிம் இயக்கிய இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, சுனிதா ஆகியோர் வாங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த ஓ பேபி என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்தவர்கள்.

நிவேதா தாமஸ்
இந்தப் படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இவர், ஸ்வாமி ரா ரா, டோச்சே, கேசவா, ரனரங்கம் ஆகிய படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் ரெஜினாவுடன் இன்னொரு ஹீரோய்ஹினாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர், தமிழில் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கும் சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தவர்.

கொரிய மாஸ்டர்கள்
மிட்நைட் ரன்னர்ஸ் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் காமெடியாக அமைக்கப்பட்டிருந்தன. இதனால் ஒரிஜினல் படத்துக்கு ஆக்ஷன் காட்சிகள் அமைத்த கொரிய பைட் மாஸ்டர்களே இந்தப் படத்துக்கும் ஆக்ஷன் காட்சிகள் அமைக்கின்றனர். இதற்காக வரும் அவர்கள் ரெஜினாவுக்கும் நிவேதாவுக்கும் பயிற்சி அளிக்க இருக்கின்றனர். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











