கொற்றவை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது இயக்குனர் C.V. குமார் ட்வீட்

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னனி தயாரிப்பாளராக திகழும் C.V. குமார் தற்போது கொற்றவை படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.

ராஜேஷ் கனகசபை, சந்தனா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எழுத்தாளர் தமிழ்மகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வின் எடிட்டிங் செய்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்து

ரசிகர்களை கவர்ந்து

தமிழில் அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற சிறப்பான படங்களை தயாரித்த C.V. குமார் இயக்கும் 3வது படம் தான் கொற்றவை. இதற்கு முன் இவர் இயக்கிய மாயவன், மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் பல ரசிகர்களை கவர்ந்தது.

சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்

சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்

இந்த படம் குறித்து C.V. குமார், "கொற்றவை உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தயாராகும் படம் எனவும், இந்த வகை படங்கள் ஹாலிவுட்டில் மிக பிரபலமானவை எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வரலாறும் புனைவும் கலந்து சொல்லும் இவ்வகை கதைகள், ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்" எனவும் கூறியுள்ளார்.

பிசியாக தயாரிப்பாளர்

பிசியாக தயாரிப்பாளர்

தற்போது 'கொற்றவை', 'டைட்டானிக்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் C.V. குமார். இது மட்டுமன்றி 'இன்று நேற்று நாளை 2', 'சூது கவ்வும் 2' ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். இந்நிலையில் மாயவன் 2ம் பாகத்திற்கான கதையை எழுதவும் தொடங்கியுள்ளார் இயக்குனர் C.V. குமார்.

இயக்குனர் ட்வீட்

இயக்குனர் ட்வீட்

கொற்றவை படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் நடந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது குறித்து இயக்குனர் C.V. குமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: kotravai கொற்றவை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X