தடுமாறிய தங்கலான்.. டிமான்ட்டி காலனி 2, வாழை படங்களுக்கு அதிகரித்த தியேட்டர்கள்.. கொட்டுக்காளி நிலை?
சென்னை: கடந்த வாரம் தமிழ் சினிமாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா படம் முதல் நாளே தோல்வியை தழுவியது. சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் முதல் வாரத்தில் வசூல் வேட்டை நடத்திய நிலையில், திங்கட்கிழமை முதல் அந்த படத்திற்கு ரசிகர்கள் வருகை படிப்படியாக குறைய ஆரம்பித்து விட்டது.
2வது வாரத்தில் ரசிகர்கள் வருகை அதிகரிக்கும் என்றும் தங்கலான் படம் 100 கோடி வசூலை எடுக்கும் என்றெல்லாம் சியான் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படத்தின் வசூலில் முன்னேற்றமே எட்டவில்லை.

இந்த வாரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை, பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான கொட்டுக்காளி, விமல் நடித்த போகுமிடம் வெகு தூரமில்லை உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில், தங்கலான் படத்துக்கான காட்சிகள் அதிகளவில் குறைந்து விட்டன.
டிமான்ட்டி காலனி 2: தங்கலான் அளவுக்கு முதல் வாரம் வசூல் ஈட்டவில்லை என்றும் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் முதல் நாளில் இருந்தே கணிசமான வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. முதல் வாரத்தை கடந்து வார நாட்களிலும் ரசிகர்களை கவர்ந்த டிமான்ட்டி காலனி 2 இந்த வாரமும் அதிக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தியேட்டர்கள் அதிகரிப்பு: தமிழ்நாடு முழுவதும் 275 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் 2வது வாரத்தில் 350 தியேட்டர்களில் ஓடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 20 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் கடந்த 10 நாட்களில் அள்ளியுள்ள நிலையில், இந்த வாரமும் டிமான்ட்டி காலனி 2 படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டிலும் ஸ்ட்ரீ 2 படம் தான் சுதந்திர தின ரிலீஸாக வெளியாகி 400 கோடி வசூல் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

வாழைக்கு வந்த வாழ்வு: சூரியின் கொட்டுக்காளி எதிர்பார்த்தபடியே ரசிகர்களை கவராத நிலையில், மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் பிக்கப் ஆக ஆரம்பித்துள்ளது. 190 தியேட்டர்களில் மட்டுமே வெளியான வாழை படம் முதல் நாளிலேயே 1 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், தற்போது 240 தியேட்டர்களில் அந்த படம் திரையிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











