முத்தம், கண்ணீர், பாராட்டு ஓகே.. பாக்ஸ் ஆபிஸில் வாழை, கொட்டுக்காளி நிலைமை என்ன?.. வசூல் கணிப்பு!

சென்னை: மலையாள சினிமாவை போல தரமான படங்கள் தமிழ் சினிமாவில் வருவது கிடையாது என்றும் வெறும் வன்முறை படங்களாகவும் துப்பாக்கி சத்தங்களாகவும் கேட்கின்றன என விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், அதற்கு எல்லாம் விடையாக எங்களிடமும் உலகத் தரமான படைப்புகளை கொடுக்கவும் ஆட்கள் இருக்காங்கப்பா என இந்த வாரம் வெளியாகியுள்ள வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய இரண்டு படங்களும் கூறி வருகின்றன.

மணிரத்னம் முதல் பாலா வரை பல முன்னணி இயக்குநர்களும் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர்களும் பாராட்டி வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் மக்கள் எந்தளவுக்கு இந்த 2 படங்களுக்கும் வரவேற்பு கொடுத்துள்ளனர் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kottukkaali Vaazhai Box Office

ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு குவியும் அளவுக்கு கூட்டம் இந்த ஆண்டு விஜய் சேதுபதி, சுந்தர் சி, சூரி நடித்த படங்களுக்கும் குவிந்ததை பார்த்த நிலையில், மீண்டும் சூரி நடித்துள்ள கொட்டுக்காளியை ரசிகர்கள் கொண்டாடுவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மாரி செல்வராஜின் படங்களின் வசூல்: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜுக்கு முதல் படம் வெற்றிப் படமாகவே மாறியது. ஆனால், வசூலில் பெரியளவில் அந்த படம் சாதனை படைக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே 5 கோடிக்கும் கீழ் தான் அந்த படம் வசூல் செய்திருக்கும் என்கின்றனர். ஆனால், கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூலே 12 கோடியாக மாறியது. கர்ணன் திரைப்படம் அதிகபட்சமாக 62 கோடி வரை வசூல் செய்தது என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படம் 52 கோடி வரை வசூல் செய்ததாக கூறுகின்றனர்.

வாழை முதல் நாள் வசூல் கணிப்பு: கர்ணன், மாமன்னன் படங்களை போல இந்த படத்தில் தனுஷ் அல்லது உதயநிதி ஸ்டாலின் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவில்லை. இந்த படம் லாபம் தரவில்லை என்றால் கூட பரவாயில்லை, ரிலீஸ் ஆனாலே போதும் என்கிற வெறியுடன் தான் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். பாராட்டுக்களையும், முத்தங்களையும், கண்ணீரையும் வரவழைத்துள்ள இந்த படம் முதல் நாளில் 351 காட்சிகளுடன் 27.40 லட்சம் வசூல் தான் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொட்டுக்காளி முதல் நாள் வசூல் கணிப்பு: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் வெளியாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் 233 காட்சிகளுடன் முதல் நாளில் வெறும் 17.63 லட்சம் தான் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சூரி நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

கமர்ஷியல் படங்களை விரும்பும் மக்கள்: தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் முழுக்கவே கொலைகளாக நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் குவிந்தாலும் அந்த படம் 150 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறுகின்றனர். கலாநிதி மாறன் தனியாக தனுஷை அழைத்து செக் எல்லாம் கூடுதலாக கொடுத்துள்ளார். பின்னணி இசை கூட இல்லாமல் வாழ்வியலை படமாக்குகிறேன் என வினோத்ராஜ் படமெடுத்து கிளைமேக்ஸ் நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் என விட்டு விட்டார், அந்த படங்களை எல்லாம் மக்கள் ரசிக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X