ரொம்ப நம்பிக்கையோடு நடித்தார்.. சூரி இனி அப்படி நடிக்கவேமாட்டார்.. கொட்டுக்காளி இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: சூரி இப்போது கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான அவர் அடுத்ததாக கொட்டுக்காளி, கருடன் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இவற்றில் கருடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கொட்டுக்காளி படமோ விமர்சன ரீதியாக ஒருதரப்பினரால் கொண்டாடப்பட்டாலும் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸை பெறவில்லை. இந்தச் சூழலில் அந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அடையாளப்பட்டவர் சூரி. அந்தப் படத்திலிருந்து பரோட்டா சூரி என்று அழைக்கப்படும் அவர் தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோல்களை செய்தார். அதன் காரணமாக அவர் முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தையும் தக்க வைத்துக்கொண்டார். விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் எல்லாம் தவறாமல் அவர் இருந்தார். எனவே மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த அவருக்கு கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

soori kottukkaali ps vinothraj

விடுதலை சூரி: அதன்படி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முக்கியமாக சூரியின் நடிப்பும் மிரட்டலாகவே இருந்தது. அதனை கவனித்த ரசிகர்கள் சூரிக்குள் இப்படி ஒரு நடிகரா என்று வியந்துபோனார்கள். அந்தப் படத்தின் பெரும் வெற்றியின் காரணமாக இனி கதையின் நாயகனாகவே தொடரலாம் என்ற முடிவுக்கு சூரி தீர்க்கமாக வந்துவிட்டார்.

அடுத்த படங்கள்: விடுதலை படத்துக்கு பிறகு அவர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் நடித்தார். இவற்றில் கருடன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. அதில் சூரிக்கு ஏகப்பட்ட மாஸ் சீன்கள் இருந்தன. இயக்குநரும், நடிகருமான சசிகுமார்கூட, கருடன் படத்துக்கு பிறகு சூரி கதையின் நாயகன் என்ற இடத்திலிருந்து கதாநாயகன் என்ற இடத்துக்கு நகர்வார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாமன் சூரி: சூரியின் நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாவது பாகமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தப் படத்தை முடித்திருக்கும் அவர் விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் மாமன் என்ற படத்திலும் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

கொட்டுக்காளி அப்செட்: இதற்கிடையே சூரியின் சிறந்த ஃபெர்பாமன்ஸ்களில் ஒன்றாக பார்க்கப்படுவது கொட்டுக்காளி. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் உலக அளவில் பல விருதுகளை குவித்தது. கமல் ஹாசனும் படத்தையும், படத்தில் நடித்திருந்த சூரியையும் வெகுவாக பாராட்டியிருந்தார். ஆனால் பெரும்பான்மையான ரசிகர்களிடம் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக சினிமா ஆர்வலர்களும் கொஞ்சம் அப்செட்டே ஆகினர்.

வினோத்ராஜ் பேட்டி: இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வினோத்ராஜ் சூரி குறித்து பேசுகையில், "சூரி இனிமேல் கொட்டுக்காளி போன்ற திரைப்படத்தில் நடிக்கமாட்டார். அவர் இந்தப் படத்துக்காக அவ்வளவு உழைப்பை போட்டார். அதில் அவர் ரீ ப்ளேஸ் செய்ய முடியாத அளவுக்கு நடிப்பை கொடுத்தார். ரொம்பவே நம்பி நடித்தார். ஆனால் படத்துக்கு என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அவரிடம் சென்று கருடன் மாதிரி ஏன் கொட்டுக்காளி போகவில்லை என்றுதான் கேட்பார்கள். அதுமட்டுமின்றி அவர் இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அவரும் இந்த இடத்தை தக்க வைக்கத்தானே விருப்பப்படுவார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X