ஹீரோவாக சூரியின் 2ஆவது படம் - வெளியானது கொடுக்காளி படத்தின் டீசர்

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டீசர் வெளியானது. படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார்.

நடிகர் சூரி பல காலமாக சினிமாவில் இருப்பவர். எப்படியாவது சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. இதனையடுத்து சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டினார் சூரி.

சூரிக்கு வெளிச்சம் கொடுத்த வெண்ணிலா கபடி குழு

சூரிக்கு வெளிச்சம் கொடுத்த வெண்ணிலா கபடி குழு

நிலைமை இப்படி இருக்க சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தார் சூரி. அந்தப் படத்தில் புரோட்டா திங்கும் காட்சியை தனது நடிப்பின் மூலம் சூரி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது வெகுளித்தனமான முகமும், வசன உச்சரிப்பும் ரசிக்கும்படியாகவே இருந்தன.

முன்னணி காமெடி நடிகரான சூரி

முன்னணி காமெடி நடிகரான சூரி

இதனையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. நகைச்சுவை நடிகராக ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அவரது காமெடி ரசிக்கும்படியாக இருந்தாலும் சிலர் அதனை விமர்சிக்கவும் செய்தனர். இருந்தாலும் சூரிக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. இதற்கிடையே பெரும்பாலான காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிவிட்ட சூழலில் சூரி எப்போது ஹீரோவாக மாறுவர் என்ற கேள்வி எழுந்தது.

விடுதலையில் ஹீரோவாக சூரி

விடுதலையில் ஹீரோவாக சூரி

யாரும் எதிர்பார்க்காத வகையில் விடுதலை படத்தில் ஹீரோவாக கமிட்டானார் சூரி. ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படமே வெற்றிமாறனின் படம் என்பதால் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என பலர் கூறுகின்றனர். மேலும், விடுதலை ட்ரெய்லரில் சூரியின் நடிப்பைப் பார்த்த பலரும் அவரை ஏகத்துக்கும் பாராட்டி வருகின்றனர். அந்தப் படமானது மார் 31ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோவாக சூரிக்கு இரண்டாவது படம் கொட்டுக்காளி

ஹீரோவாக சூரிக்கு இரண்டாவது படம் கொட்டுக்காளி

சூரி ஹீரோவாக நடித்த விடுதலை படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் அவர் இரண்டாவது படத்திலும் ஹீரொவாக கமிட்டாகியிருக்கிறார் என தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார். படத்துக்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

வெளியானது கொட்டுக்காளி டீசர்

வெளியானது கொட்டுக்காளி டீசர்

இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் 47 நொடி கொண்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. அதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் பல விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது. எனவே இந்தப் படமும் கூழாங்கல் படமும் விமர்சன ரீதியாக வென்று சூரிக்கு மேலும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X