கொட்டுக்காளி திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் படக்குழு!
சென்னை: விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான நடிகர் சூரி தற்போது, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், நகைச்சவை நடிகர் சூரி விடுதலை படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், மலையாள திரைப்படமான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த டீசர் ஒன்று கடந்த ஆண்டு வெளியான போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

கொட்டுக்காளி: இதை தெடர்ந்து, தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தை படக்குழு பல்வேறு விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெர்லினாலே 2024 என்று அழைக்கப்படும் 74வது ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா கடந்த பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் இறுதி சுற்றில் இந்த படம் விருது பெறாமல் வெளியேறியது.
சர்வதேச திரைப்பட விழா: இந்நிலையில் இந்த திரைப்படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது. சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
விருதை குவித்த கூழாங்கல்: கொட்டுக்காளி படத்தை இயக்கி உள்ள இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் முந்தைய படமான 'கூழாங்கல்' ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்று 'டைகர்' விருதை வென்றது. இவ்விருதை வாங்கிய முதல் தமிழ்ப் படமும் இந்தியாவின் இரண்டாவது படமும் இதுதான். மேலும், 94வது ஆஸ்கர் விழாவிற்கு இந்தியா சார்பாக அனுப்பப்பட்டது. ஆனால் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











