Kottukkaali vs Vaazhai: கொட்டுக்காளி, வாழை இரண்டு படங்களில் எந்த படம் சூப்பர்?.. ஒரு சின்ன அலசல்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை மற்றும் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி படங்கள் இன்று வெளியாகி உள்ளன. மேலும், விமல் நடித்த போகும் இடம் வெகு தூரமில்லை, அதர்மக் கதைகள் மற்றும் சாலா உள்ளிட்ட படங்களும் இன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன.

மாரி செல்வராஜின் வாழை மற்றும் சூரியின் கொட்டுக்காளி படங்களுக்குத்தான் இதில், அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சியான் விக்ரமின் தங்கலான் படமும் திரையரங்குகளில் இந்த வாரமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

Kottukkaali Vaazhai Mari Selvaraj

வாழை மற்றும் கொட்டுக்காளி படங்களின் பத்திரிகையாளர் காட்சி முடிந்த நிலையில், அந்த படங்கள் குறித்த விமர்சனங்களை பார்த்து விட்டோம். இந்நிலையில், இரண்டு படங்களில் ரசிகர்களை அதிகம் எந்த படம் கவரும் என்பது குறித்த அலசலை இங்கே பார்ப்போம் வாங்க..

கொட்டுக்காளி: கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் இன்று வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்துள்ளார். பேய் பிடித்ததாக சொல்லி ஹீரோயினை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பூசாரியிடம் அழைத்துச் செல்வது தான் கதை. இறுதியில் யாருக்கு உண்மையாகவே பேய் பிடித்திருக்கிறது. பேய் ஓட்ட வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள் என முடித்திருக்கும் கிளைமேக்ஸ் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களால் பாராட்டப்பட்டுள்ளன. இயக்குநர் மிஷ்கின் வினோத்ராஜின் பாதங்களுக்கு முத்தமிடுவேன் என்றார். வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். பின்னணி இசையே இல்லாமல் பாடல்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்கிறது.

வாழை: மாரி செல்வராஜின் சிறு வயது வாழ்க்கையை படமாக வாழை என்கிற டைட்டிலில் அவர் எடுத்திருக்கிறார். வாழை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் இப்படியொரு சோக நிகழ்வு நடந்ததா என அனைவரும் அதிர்ச்சியாகும் அளவுக்கு ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அதை பார்த்து விட்டு இயக்குநர் பாலா கண்ணீர் மல்க வந்து மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். பா. ரஞ்சித், ராம், மிஷ்கின், நெல்சன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த படத்தை பாராட்டியுள்ளனர். வாழைக்காய் சுமக்கும் பள்ளி மாணவனின் குமுறல்களும் கம்யூனிச அரசியலையும் இந்த படத்தில் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

எது பெஸ்ட்?: வாழை மற்றும் கொட்டுக்காளி இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் தான். மலையாள படங்களை இந்த ஆண்டு முதல் பாதியில் கொண்டாடி தீர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த படங்களை விட சிறப்பான கலை படைப்பாக வந்த இந்த 2 படங்களையும் தியேட்டர்களில் கொண்டாடி தீர்ப்பார்களா? என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.

கொட்டுக்காளி படத்தில் பின்னணி இசை, காட்சிகள் எல்லாம் குறியீடுகளாக புரிந்துக் கொள்ளும்படி எடுக்கப்பட்டு இருக்கும். கிளைமேக்ஸ் காட்சியும் பொது ரசிகர்களுக்கு எந்தளவுக்கு புரியும் புடிக்கும் என்பது கேள்வியாகத்தான் உள்ளது. ஆனால், வாழை திரைப்படம் புரியும்படியும் புடிக்கும்படியும் கிளைமேக்ஸில் கனத்த இதயத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வரும் அளவுக்கு உள்ளது. இரண்டு படங்களில் எது சிறந்த படம் என்பது அவரவர் ரசனைகளை பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X