பத்திரிகைக்கு பிறந்தமேனியாக போஸ் கொடுத்த டிவி நடிகை: வீட்டில் அப்படித்தானாம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கோர்ட்னி கர்தாஷியன் ஆடையில்லாமல் போஸ் கொடுத்துள்ளார்.
பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியனின் சகோதரி கோர்ட்னி(39). அவர் கிம் வழியில் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு பிறந்தமேனியாக போஸ் கொடுத்துள்ளார்.
அப்படி போஸ் கொடுத்ததற்கு அவர் ஒரு காரணமும் கூறுகிறார்.

சவுகரியம்
ஆடையில்லாமல் இருப்பது சவுகரியமாக உள்ளது. என் வீட்டில் ஆடையில்லாமல் இருக்க விரும்புகிறேன். நம் உடம்பை பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நிர்வாணமாக போஸ் கொடுக்கும்போது ஒரு ஃபவர் வருகிறது. அதை பிற பெண்களுக்கு கொடுக்க விரும்பினேன் என்று கோர்ட்னி தெரிவித்துள்ளார்.

உடற்பயிற்சி
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு மட்டும் அல்ல மனதுக்கும் நல்லது. நான் உடற்பயிற்சி செய்யும்போது ரிலாக்ஸாக உணர்கிறேன். ஒரு தாயாக இருப்பது தான் என் வாழ்வின் முக்கியமான விஷயம் என்கிறார் கோர்ட்னி கர்தாஷியன்.

மகள்
நான் நிச்சயம் எனக்காக வாழ்கிறேன். நான் சிறந்த தாய், சகோதரி, மகள் மற்றும் தோழியாக இருக்க முயற்சி செய்து வருகிறேன். நான் கர்ப்பமாக இருந்தபோதும் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளேன். எனக்கு கர்பமாக இருப்பது பிடிக்கும். அது ஒரு அழகிய நிலை. அதை உலகிற்கு காட்ட விரும்பினேன் என்று கோர்ட்னி கூறியுள்ளார்.

விமர்சனம்
ஒரு பிரபலமாக இருப்பதால் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. என்னை பற்றி என் சூழ்நிலையை பற்றி தெரியாதவர்கள் தான் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நினைவூட்டிக் கொள்வேன் என்கிறார் கோர்ட்னி.


Click it and Unblock the Notifications











