Kovai Guna: அந்த பயத்திலேயே சினிமா படங்களை தவிர்த்த கோவை குணா.. அவரே சொன்ன த்ரோபேக் பேட்டி!

சென்னை: சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து உள்ளிட்டவர்களுடன் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஒன்றாக காமெடி செய்து கலக்கிய கோவை குணா இன்று காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கோவை குணா உயிரிழந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு கோவை குணாவுடன் காமெடி செய்த பலரும் முன்னேறிய நிலையில், தான் ஏன் அதிக படங்களில் கமிட் ஆகவில்லை என்பது குறித்து அவரே பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

கடந்த 2005ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கோவை குணா சிவாஜி கணேசன், லூசு மோகன், ஜனகராஜ், கவுண்டமணி என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் போல மிமிக்ரி செய்து அசத்திய நிலையில், அந்த சீசன் டைட்டிலையே அவர் தான் வென்றார். இரண்டாவது சீசன் டைட்டிலை சிவகார்த்திகேயன் தட்டித் தூக்கினார்.

பட வாய்ப்புகள் குறைவு

பட வாய்ப்புகள் குறைவு

சிவகார்த்திகேயனுக்கு முன்னதாகவே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற கோவை குணா 2006ம் ஆண்டு பரத், ஜெனிலியா நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சென்னை காதல் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானார். ஆனால், அதற்கு பின் அதிகமாக சினிமா படங்களில் அவர் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் முதல் ரோபோ சங்கர் வரை

சிவகார்த்திகேயன் முதல் ரோபோ சங்கர் வரை

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து உள்ளிட்ட பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலங்கள் ஆன நிலையில், கோவை குணா தொடர்ந்து மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகளையே நடத்தி வந்தார்.

சிரிக்க வைக்கிறது கஷ்டம்

சிரிக்க வைக்கிறது கஷ்டம்

கோவை குணாவின் த்ரோபேக் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், ரசிகர்களை சிரிக்க வைக்கிறது கஷ்டம் ஈஸியா அழ வைத்து விடலாம் என ஆரம்பித்து தனது வாழ்க்கை பற்றியும் சினிமாவில் அதிகம் ஆர்வம் செலுத்தாதது குறித்தும் அவர் பேசி உள்ளார்.

அந்த பயம் தான் காரணம்

அந்த பயம் தான் காரணம்

சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போல சினிமாவில் அதிகம் நடிக்காமல் இருப்பது ஏன் என்கிற தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த கோவை குணா மேடையில் நல்லா காமெடி பண்ணி பெயர் வாங்குறதை டிவி ஷோக்களிலும் சினிமாவில் சென்று நடித்தும் கெடுத்து விடுவேனோ என்கிற பயம் தான் நிறைய படங்களில் நடிக்காததற்கு காரணம் என்று பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X