இதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. கோவை சரளா சொன்ன காரணம்.. ஓபனா பேசிட்டாங்களே
சென்னை: நகைச்சுவை ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. அது இருப்பதால்தான் பலர் தங்களது கவலைகளை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அதில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சுவார்கள். அப்படிப்பட்ட ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அவர் விளக்கமளித்திருக்கிறார்.
சினிமா என்றாலே ஆண்கள் கோலோச்சும் துறை என்ற கருத்துதான் பெரும்பாலும் இருக்கிறது. அதையும் மீறி சில பெண்கள்தான் சினிமாவில் தொடர்ந்து கோலோச்சுகிறார்கள். அதிலும் நகைச்சுவையில் நடிகர்களின் ஆதிக்கம்தான் அதிகம் இருக்கும். ஆனால் விதிவிலக்காக பெண்களும் முன்னேறுவதுண்டு. அந்தவகையில் பெரிய அளவில் சக்சஸ் ஆன நகைச்சுவை நடிகைகளில் மனோரமா முதல் விதை. அதற்கு பிறகு பார்த்தால் கோவை சரளா தனது காமெடியால் அதகளம் செய்யக்கூடியவர்.

அட்டகாசமான நடிகை: கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த கோவை சரளா 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடியும், நடனம் ஆடும் காமெடியும் கோவை சரளாவின் நடிப்பு திறமைக்கு பெரும் சான்று. அதற்கு பிறகு வடிவேலுவுடன் அவர் காம்பினேஷன் போட்ட விரலுக்கேத்த வீக்கம் படத்தில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதேபோல் விவேக்குடன் ஷாஜஹான் உள்ளிட்ட படங்களில் நடித்து அசால்ட்டாக சம்பவம் செய்திருப்பார் கோவை சரளா.
கமலுக்கு ஹீரோயின்: எந்த காமெடி நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்புக் கோவை சரளாவுக்கு கிடைத்தது. அவரது நடிப்பை பார்த்து அசந்துபோன கமல் ஹாசன் சதிலீலாவதி படத்தில் தனக்கு ஜோடியாக்கினார் கமல் ஹாசன். முக்கியமாக அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலும், மாருகோ மாருகோ மாருகழி பாடலிலும் கமல் ஹாசனுக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பார் கோவை சரளா. அந்தப் படத்தில் கோவை சரளாவின் நடிப்பு இன்றுவரை பலருக்கும் ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஸி நடிகை: காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப கோவை சரளா இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்த வயதிலும் தனது நகைச்சுவை திறமையை காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கும் அவர் கடைசியாக அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகிறது. இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் கோவை சரளா.
கோவை சரளா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "பிறக்கும்போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதேபோல் இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் எனக்கு தேவையில்லை என தோன்றியது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு இன்று தனியாக வாழ்ந்துவருகிறார்கள். யாரையும் சார்ந்து எனக்கு வாழ பிடிக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











