கோச்சடையான் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் உருவாக்கிய ட்ரைலர் - இணையத்தில் பெரும் வரவேற்பு

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் ஒரு ட்ரைலர் உருவாக்கியுள்ளனர். அது இணையத்தில் நல்ல வரவேற்பையும், சவுந்தர்யா ரஜினிகாந்தின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் உள்பட பலர் நடித்து வெளியான படம் கோச்சடையான். இது மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் 3டி படமாகும்.

கோச்சடையான்

கோச்சடையான்

இந்தப் படம் சமீபத்தில் உலகெங்கும் 4000 அரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, மராத்தி, போஜ்புரி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் தமிழில் மட்டும் பெரிய வெற்றியைப் பெற்றது. பிற மொழிகளில் சரியான வரவேற்பைப் பெறவில்லை. படம் வெளியாகும் தேதியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இருந்தாலும், தமிழில் கிடைத்த வெற்றியின் காரணமாக படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

கோவை இளைஞர்கள்

கோவை இளைஞர்கள்

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரணதீரன் என்ற தலைப்பில் ஒரு முன்னோட்டக் காட்சியைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர் கோவையைச் சேர்ந்த சில ரசிகர்கள்.

இலவச மென்பொருள்கள்

இலவச மென்பொருள்கள்

ரியல் ஒர்க் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் இந்த ட்ரைலரை வெளியிட்டுள்ள இவர்கள், முழுக்க முழுக்க இலவச மென்பொருள்களைக் கொண்டே இந்த மூன்றரை நிமிடப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் மேம்பட்ட தரத்தில் காணப்படுகின்றன.

வரவேற்பு

வரவேற்பு

இந்த ட்ரைலரை கடந்த திங்களன்று யுட்யூபில் பதிவேற்றினர். படத்தைப் பார்த்த அனைவருமே மிகவும் பாராட்டியுள்ளதோடு, இரண்டாம் பாகத்துக்கு வரவேற்பும் கொடுத்துள்ளனர்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

இந்தப் படத்தைப் பார்த்த கோச்சடையான் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்தும், தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்த இளைஞர்களைச் சந்திக்க ஆர்வமாக உள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் பாகத்தில்

இரண்டாம் பாகத்தில்

பத்து வாரங்களில் 4500க்கும் மேற்பட படங்களை வைத்து இந்த ட்ரைலரை உருவாக்கியதாக இந்த ட்ரைலரை உருவாக்கிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் படைப்பைப் பாராட்டிய சவுந்தர்யாவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

கோச்சடையான் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது, இந்த கோவை இளைஞர்களையும் சவுந்தர்யா ரஜினி பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

ட்ரைலர்

கோச்சடையான் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் உருவாக்கிய ட்ரைலர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X