»   »  கணவர் மீது நடிகை போலீசில் புகார்

கணவர் மீது நடிகை போலீசில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ள தனது கணவரான இயக்குனர் களஞ்சியம் தன்னைகொடுமைப்படுத்தி வருவதாக துணை நடிகையும் டிவி நடிகையுமான கவுசல்யா என்பவர் சென்னை போலீஸ்கமிஷ்னரிடம் புகார் கொடுத்துள்ளார்.

கல்கி உள்ளிட்ட பல டிவி தொடர்களில் நடித்து வரும் இவர் சின்னக் கவுண்டர் படத்தில் சுகன்யாவுக்குதங்கையாகவும், மேலும் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது 3 வயது மகனுடன் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் அலுவலகத்தில் ஒரு புகார் மனுகொடுத்தார். அதில்,

எனக்கும் டைரக்டர் களஞ்சியத்துக்கும் 98ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் சாலிகிராமத்தில் வசித்துவருகிறோம். சமீப காலமாக என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் என்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். பெல்டால் அடித்து சித்திரவதை செய்கிறார். என்னையும்மகனையும் கொலை செய்வதாக மிரட்டுகிறார். எனவே நான் இப்போது என் தம்பி வீட்டில் தஞ்சம்புகுந்துள்ளேன். என் உயிருக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இகு குறித்து வடபழனி உதவி போலீஸ் கமிஷ்னர் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil