வாழ்க்கை சீரழித்த இயக்குநர்.. 34 வயதில் நடிகை விஜி எடுத்த பரிதாப முடிவு!

சென்னை: கோழி கூவுது படத்தில் அறிமுகமான விஜியை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பதிந்த அந்த குழந்தை தனமான முகத்தோடு பத்தாண்டுக்கும் மேலாக நம்மை மகிழ்ந்து வந்த விஜி, துரோகம், அழுகை, ஏமாற்றம் போன்றவற்றில் சிக்கி வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவர் சந்தித்த துயரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை விஜி 1966ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் விஜி அஸ்வந்த். சிறு வயதிலேயே படத்தில் நடித்து வந்த இவர். தனது 17 வயதில் கங்கை அமரன் இயக்கிய கோழி கூவுது படத்தில் சுரேஷூக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தால், சாட்சி,பொய்யால் குதிரை, அண்ணே அண்ணே,வெற்றி என அடுத்தடுத்த படத்தில் நடித்தார். சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு,மலையாளம் என ஹீரோயினாக 25க்கும் மேற்பட்ட படங்களில், அதுவும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

viji viji death kozhi koovuthu

நடிகை விஜி: கதாநாயகி வாய்ப்பு இல்லாததால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன் லாலாக்கு டோல் டப்பிமான பாடலுக்கு ஆட்டம் போட்டார்.அதே போல, ரஜினியின் உழைப்பாளி படத்திலும், விஜய்யின் பூவே உனக்காக படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். திடீரென இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

தவறான சிகிச்சை: இதைத்தொடர்ந்து அவருக்கு காலில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஆனால், அது தவறானதால், விஜியின் ஒரு கால் செயல் இழந்து நடக்கவே முடியாமல் நாற்காலியிலே முடங்கிப்போனார். இதைத்தொடர்ந்து, தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது வழக்கு தொடுத்து நஷ்டஈடுபெற்றார். அப்போது, நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த விஜயகாந்த், விஜிக்கு தேவையான உதவிகளை செய்து மீண்டும் அவரை நடக்க வைத்தார். அதோடு மட்டுமில்லாமல் சிம்மாசனம் படத்தில் விஜிக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்து அழகுப்பார்த்தார்.

ஏமாற்றிய இயக்குநர்: சக்கர நாற்காலியோடு வாழ்க்கையே முடிந்து போய்விடும் என கண்ணீர் வடித்த விஜிக்கு மீண்டும் படவாய்ப்புகள் வரத்தொடங்கிய நிலையில், சினிமா இயக்குனர் ஒருவரை காதலித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சொன்ன போது தான், இந்த இயக்குநருக்கு தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பது தெரிந்துள்ளது. அதைமறைந்து ஏமாற்றி பணத்திற்காக அனைத்தையும் மறைத்து பழகி உள்ளார்.இதுகுறித்து வேதனை அடைந்த நடிகை விஜி 2000 ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ந் தேதி சென்னை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆதாரமில்லை: தற்கொலை செய்து கொள்வதற்கு முன், இயக்குநரான ஏஆர் ரமேஷ், என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என் ஒரு டேப்பில் தற்கொலைக்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். இந்தடேப்பை ஆதாரமாக வைத்து போலீசார் ரமேஷ், அவரது மனைவி மற்றும் நண்பரை கைது செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், போதிய ஆதாரங்களை போலீஸார் காட்டவில்லை என்று கூறி நீதிபதி 3 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

17வயதில் தனது உழைப்பால் சினிமாவில் முட்டிபோதி நடிகையான இவர், நோய்வாய் பட்டு, கால் செயல் இழந்த போது மருத்துவமனை மீது வழக்கு போட்டு, அடுத்தடுத்து ஆப்ரேஷன்களை செய்து மீண்டுவந்த விஜியால், காதல் செய்த துரோகத்தையும், அதன் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் 34 வயதிலேயே மொத்தமாக முடித்துக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X